» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

டி20 போட்டிகளில் 10 ஆயிரம் ரன்கள்: விராட் கோலி புதிய சாதனை

திங்கள் 27, செப்டம்பர் 2021 5:04:04 PM (IST)

கேப்டன் விராட் கோலி, டி20 போட்டிகளில் 10 ஆயிரம் ரன்கள் சேர்த்த முதல் இந்திய பேட்ஸ்மேன், உலக அளவில் 5-வது பேட்ஸ்மேன் எனும் சிறப்பைப் பெற்றுள்ளார்.

துபாயில் நேற்று மும்பை  அணிக்கு எதிரான ஆட்டத்தில் கோலி 51 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் பும்ரா பந்துவீச்சில் கோலி சிக்ஸர் அடித்தபோதுதான் இந்த சாதனையை நிகழ்த்தினார். இந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 54 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆர்சிபி அணி.

விராட் கோலி இதுவரை 299 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ளார். டி20 போட்டிகளில் சராசரியாக 41.61 ரன்கள், 5 சதங்கள், 73 அரை சதங்களை கோலி அடித்துள்ளார். ஐபிஎல் தொடரில் மட்டும் கோலி அதிகமான ரன் சேர்த்தவர் அல்ல, சர்வதேச அரங்கிலும் டி20 போட்டித் தொடரிலும் அதிகமான ரன் குவித்த வீரர் பட்டியலில் கோலி உள்ளார். இந்திய அணிக்காக 84 போட்டிகளில் ஆடிய கோலி, 3,159 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் சராசரி 52.65. சர்வதேச அரங்கில் இந்திய அணிக்காக 28 அரை சதங்களை கோலி அடித்துள்ளார்.

ஒட்டுமொத்த டி20 போட்டிகளில் விராட் கோலி 10 ஆயிரம் ரன்களை எட்டி முதல் இந்திய பேட்ஸ்மேன் எனும் சாதனையைப் படைத்துள்ளார். உலக அளவில் 10 ஆயிரம் ரன்களை எட்டிய 5-வது வீரர் எனும் பெருமையையும் பெற்றுள்ளார். மே.இ.தீவுகள் கிறிஸ் கெயில் டி20 போட்டிகளில் 14 ஆயிரம் ரன்களும், கெய்ரன் பொலார்ட், பாகிஸ்தான் வீரர் ஷோயப் மாலிக், ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் ஆகியோர் 10 ஆயிரம் ரன்களையும் எட்டியுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory