» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஹர்ஷல் படேல் ஹாட்ரிக். மும்பையை வீழ்த்தியது ஆர்சிபி!

திங்கள் 27, செப்டம்பர் 2021 12:44:53 PM (IST)மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில், பெங்களூரு அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பதிவு செய்துள்ளது.

துபையில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸை 54 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது ஆர்சிபி அணி. முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. கோலி 51, மேக்ஸ்வெல் 56, பரத் 32 ரன்கள் எடுத்தார்கள். பும்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பிறகு விளையாடிய மும்பை அணி முதல் விக்கெட்டுக்கு 57 ரன்கள் எடுத்தது. இதன்பிறகு ஹர்ஷல் படேல் ஹாட்ரிக் எடுத்து அசத்தினார். அவர் 4 விக்கெட்டுகளை எடுத்ததால் 18.1 ஓவர்களில் 111 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது மும்பை அணி. சஹால் 3 விக்கெட்டுகளும் மேக்ஸ்வெல் 2 விக்கெட்டுகளும் எடுத்தார்கள். ஆட்ட நாயகன் விருது மேக்ஸ்வெல்லுக்குக் கிடைத்தது.

இப்போட்டியில் தொடக்க வீரர் தேவ்தத் படிக்கல், பும்ரா ஓவரில் ரன் ஏதும் அடிக்காமல் வெளியேற, ஆர்சிபி-க்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. எனினும், 2வது விக்கெட்டுக்கு இணைந்த கேப்டன் விராட் கோலி மற்றும் விக்கெட் கீப்பர் ஸ்ரீகர் பரத், இருவரும் சிக்ஸர்கள், பவுண்டரிகள் என்று விளாச, ரன்கள் ராக்கெட் வேகத்தில் எகிறியது. பிறகு ராகுல் சாஹர் ஓவரில் பரத் 32 ரன்களில் அவுட்டாக, மூன்றாவது விக்கெட்டுக்கு மேக்ஸ்வெல் களமிறங்கினார்.  கடந்த சில போட்டிகளில் தடுமாறிய மேக்ஸ்வெல், இன்று சில பல சிக்ஸர்களை பறக்கவிட ரன்கள் டீசண்ட்டாக வந்து கொண்டிருந்தது. 

இதையடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில், ரோஹித் - டி காக் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தினர். ரோஹித் 43 ரன்களும், டி காக் 24 ரன்கள் எடுத்து அவுட்டான பிறகு, ஒட்டுமொத்த மும்பை அணியின் பேட்டிங்கும் கொலாப்ஸ் ஆக தொடங்கியது. அதன் பிறகு ஒருவர் கூட இரட்டை இலக்கை எட்டவில்லை. இஷான் கிஷன் 9, சூர்யகுமார் யாதவ் 8, க்ருனால் 5 என்று அடுத்தடுத்து அவுட்டானார்கள். இறுதியில் ஹர்திக் பாண்ட்யா மற்றும் பொல்லார்ட் மற்றும் களத்தில் இருந்தனர். அவர்கள் இருவரும் அடித்தால் வெற்றி, இல்லையெனில் தோல்வி என்று ரசிகர்கள் நினைத்த நிலையில், ஹர்ஷல் படேல் ஒரே ஓவரில் டோட்டல் மேட்சையும் முடித்துவிட்டார்.

16.1, 16.2, 16.3 என்று வரிசையாக மூன்று பந்துகளில் ஹர்திக் பாண்ட்யா, பொல்லார்ட், ராகுல் சாஹர் என்று மும்பை அணியின் கடைசி நம்பிக்கையை ஹாட்ரிக் விக்கெட் மூலம் தகர்த்தெறிந்தார் ஹர்ஷல் படேல். இதன் மூலம், பெங்களூரு அணியில் ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றிய மூன்றாவது வீரர் எனும் பெருமையை ஹர்ஷல் பெற்றுள்ளார். இறுதியில், மும்பை அணி 18.1வது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 111 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பெங்களூரு அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்துள்ளது. ஹர்ஷல் படேல் 4 விக்கெட்டுகளை கைப்பற்ற, சாஹல் 4 ஓவர்கள் வீசி, வெறும் 11 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

இந்த தோல்வியின் மூலம் புள்ளிப்பட்டியலில், மும்பை 10 போட்டிகளில் 6வது தோல்வியை சந்தித்துள்ளது. இதனால், அந்த அணி 8 புள்ளிகளுடன் 7வது இடத்திற்கு பின்தங்கியுள்ளது. அதேசமயம், பெங்களூரு அணி 10 போட்டிகளில் விளையாடி 6வது வெற்றிகளுடன் 12 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. மும்பை மீண்டும் தோல்வியை சந்தித்து இருப்பதன் மூலம், அதன் பிளே ஆஃப் வாய்ப்பு மேலும் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

Nalam Pasumaiyagam
Thoothukudi Business Directory