» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஜடேஜா அதிரடி: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி த்ரில் வெற்றி!

ஞாயிறு 26, செப்டம்பர் 2021 9:36:25 PM (IST)ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சென்னை அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

ஐ.பி.எல். கிரிக்கெட்டின் 38-வது லீக் ஆட்டத்தில் இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற  கொல்கத்தா அணியின் கேப்டன் மோர்கன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து கொல்கத்தா அணி  முதலில் பேட்டிங் செய்தது.  20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது. 

இதையடுத்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. சென்னை அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ருதுராஜ் கெய்க்வாட் 40 ரன்களும், டூ ப்ளஸ்ஸி 43 ரன்களும்  எடுத்து சிறப்பான தொடக்கம் அமைத்து கொடுத்தனர். அதிரடியாக ஆடிய கெய்க்வாட் 28 பந்துகளில் 3 சிக்சர்களும், 2 பவுண்டரிகளும் விளாசி 40 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

வருண் சக்ரவர்த்தி வீசிய 18-வது ஓவரின் முதல் பந்தில் இரண்டாவது ரன் எடுக்க முயற்சித்து ரெய்னாவும் ஆட்டமிழக்க அதே ஓவரில் கேப்டன் தோனியும் 1 ரன்னுக்கு ஆட்டமிழந்ததால், ஆட்டம் மேலும் விறுவிறுப்பானது. அந்த ஓவரில் 5 ரன்கள் மட்டுமே கிடைத்ததால், சென்னை வெற்றிக்கு கடைசி 2 ஓவர்களில் 26 ரன்கள் தேவைப்பட்டன. பிரசித் கிருஷ்ணா 19-வது ஓவரை வீச முதல் இரண்டு பந்துகளில் ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரனால் தலா 1 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. 

ஆனால், அடுத்த 4 பந்துகளில் முறையே இரண்டு சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் விளாசி ஆட்டத்தை முற்றிலும் சென்னை பக்கம் திருப்பினார். இதனால், சென்னை வெற்றிக்குக் கடைசி ஓவரில் 4 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டன. கடைசி ஓவரை சுனில் நரைன் வீசினார். முதல் பந்திலேயே சாம் கரன் ஆட்டமிழக்க மீண்டும் பதற்றம் அதிகரித்தது. அடுத்த பந்தில் ஷர்துல் தாக்குர் ரன் எடுக்காததால் 4 பந்துகளில் 4 ரன்கள் தேவைப்பட்டன. ஆனால், அடுத்த பந்தில் சாமர்த்தியமான ஷாட்டால் சென்னைக்கு 3 ரன்கள் கிடைத்தன. 

3 பந்துகளில் 1 ரன்கள் தேவை. ஜடேஜா களத்தில் இருந்தார். 4-வது பந்தில் ரன் இல்லை. 5-வது பந்தில் ஜடேஜாவுக்கு எல்பிடபிள்யு கொடுத்தார் நடுவர். ஜடேஜா ரிவியு எடுக்க மூன்றாவது நடுவரால் விக்கெட் என்பது உறுதி செய்யப்பட்டது. ஜடேஜா 8 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார். இதனால், கடைசி பந்தில் சென்னை வெற்றிக்கு 1 ரன் தேவைப்பட்டது. தீபக் சஹார் தூக்கி அடித்து 1 ரன் எடுக்க சென்னை அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Black Forest Cakes

Nalam Pasumaiyagam

Thoothukudi Business Directory