» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஐபிஎல்: பெங்களூருவை வீழ்த்தி முதலிடத்துக்கு முன்னேறியது சென்னை

சனி 25, செப்டம்பர் 2021 8:52:15 AM (IST)



பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

14-வது ஐபிஎல் சீசனின் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில் முதலில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதனையடுத்து பெங்களூரு அணியில் தொடக்க வீரர்களாக விராத் கோலி மற்றும் படிக்கல் களமிறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். விராத் கோலி 53 ரன்களுக்கும், படிக்ககல் 70 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். 

பின்னர் வந்த வீரர்களில் டிவில்லியர்ஸ் 12, மேக்ஸ்வெல் 11 ரன்கள் என அடுத்தடுத்து வெளியேறினர். இதனால் பெங்களூரு அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் மட்டுமே எடுத்தது.  157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.  தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கெய்க்வாட், டூ பிளெஸ்ஸி ஆகியோர் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர். 

கெய்க்வாட் 26 பந்துகளில் 38 ரன்களையும், டூ பிளெஸ்ஸி 26 பந்துகளில் 31 ரன்களையும் எடுத்தனர். அதன் பிறகு வந்த மொயின் அலி 23 ரன்களுக்கு வெளியேற அம்பத்தி ராயுடு 32 ரன்களை எடுத்தார்.இதனைத் தொடர்ந்து சுரேஷ் ரெய்னா, கேப்டன் தோனியுடன் ஜோடி சேர்ந்து ஆடினார். ரெய்னா ஆட்டமிழக்காமல் 17 ரன்களையும், தோனி 11 ரன்களையும் எடுத்ததன் மூலம் வெற்றி இலக்கான 157 ரன்களை சென்னை அணி எட்டியது.  இதன் மூலம் 18.1 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை சென்னை அணி வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

ஐபிஎல் 2022 தொடரில் 2 புதிய அணிகள் சேர்ப்பு

செவ்வாய் 26, அக்டோபர் 2021 10:54:16 AM (IST)

Sponsored Ads


Nalam Pasumaiyagam


Black Forest Cakes






Thoothukudi Business Directory