» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

தொடர்ச்சியாக 25 வெற்றிகள்: ஆஸ்திரேலிய மகளிர் அணி சாதனை!

புதன் 22, செப்டம்பர் 2021 5:09:26 PM (IST)



ஒருநாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய மகளிர் அணி தொடர்ச்சியாக 25 வெற்றிகளைப் பெற்று சாதனை படைத்துள்ளது. 

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒருநாள், மூன்று டி20, ஒரு டெஸ்ட் என மூன்று தொடர்களில் பங்கேற்கிறது இந்திய மகளிர் அணி. முதல் ஒருநாள் ஆட்டம் மெக்கேவில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸி. அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய மகளிர் அணி, 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் எடுத்தது. கேப்டன் மிதாலி ராஜ் 63 ரன்கள் எடுத்தார். ஷஃபாலி வர்மா 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 32 ரன்கள் எடுத்தார்.  டார்சி பிரெளன் சிறப்பாகப் பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன்பிறகு பேட்டிங் செய்த ஆஸி. அணி, சிறப்பாக விளையாடி 41 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் எடுத்து முதல் ஒருநாள் ஆட்டத்தை எளிதாக வென்றது. தொடக்க வீராங்கனை 93 ரன்களும் கேப்டன் மேக் லேனிங் 53 ரன்களும் எடுத்துக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். தொடக்க வீராங்கனை அலிஸ்ஸா ஹீலி 77 ரன்கள் எடுத்தார்.  ஒருநாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய மகளிர் அணி தொடர்ச்சியாக 25 வெற்றிகளைப் பெற்று சாதனை படைத்துள்ளது. 2018 மார்ச் 12 முதல் விளையாடிய அனைத்து ஒருநாள் ஆட்டங்களிலும் அந்த அணி வெற்றி பெற்று, மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தும் அணியாக உள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital








Thoothukudi Business Directory