» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

பாதுகாப்பு அச்சுறுத்தல் : நியூசிலாந்து- பாக். கிரிக்கெட் தொடர் ரத்து

வெள்ளி 17, செப்டம்பர் 2021 3:55:19 PM (IST)பாதுகாப்பு காரணங்களுக்காக நியூசிலாந்து அணியின் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

நியூசிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருந்தது.  இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி ராவல் பிண்டி மைதானத்தில் தொடங்குவதாக இருந்தது. ஆனால், பாதுகாப்பு எச்சரிக்கை காரணமாக  முதல் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. 

அதோடு, சுற்றுப்பயணத்தையும் முடித்துக்கொண்டு நியூசிலாந்து அணி நாடு திரும்ப உள்ளது.  நியூசிலாந்து அரசு விடுத்த பாதுகாப்பு எச்சரிக்கையை அடுத்து போட்டித்தொடர் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, நியூசிலாந்து அணி 18 ஆண்டுகளுக்குப்  பிறகு பாகிஸ்தானுக்கு விளையாடச் சென்று  இருந்தது.  பாகிஸ்தானுக்கு சென்ற இலங்கை கிரிக்கெட் அணி மீது கடந்த 2009 ஆம் ஆண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலுக்குப் பிறகு பல ஆண்டுகள் வெளிநாட்டு அணிகள் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்வதை தவிர்த்து வந்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

ஐபிஎல் 2022 தொடரில் 2 புதிய அணிகள் சேர்ப்பு

செவ்வாய் 26, அக்டோபர் 2021 10:54:16 AM (IST)

Sponsored Ads


Nalam Pasumaiyagam

Black Forest CakesThoothukudi Business Directory