» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஒலிம்பிக் வீராங்கனை பவானி தேவிக்கு தங்கச் சங்கிலியை பரிசளித்த சசிகுமார்

வியாழன் 9, செப்டம்பர் 2021 4:37:34 PM (IST)டோக்கியோ ஒலிம்பிக்கில் வாள்வீச்சு போட்டியில் இந்தியா சார்பில் கலந்துகொண்ட தமிழக வீராங்கனை பவானி தேவியை சந்தித்து தன் அன்பளிப்பை வழங்கியிருக்கிறார் நடிகர் சசிகுமார்.

நடந்து முடிந்த டோக்கியோ ஒலிம்பிக்ஸில் வாள்வீச்சு போட்டியில் கலந்துகொண்டு சில புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவிய பவானி தேவியை நடிகரும் இயக்குநருமான சசிகுமார் சந்தித்து தன் வாழ்த்துகளை பகிர்ந்துகொண்டதோடு அவருக்கு தங்கச் சங்கிலி ஒன்றையும் பரிசளித்திருக்கிறார்.

இதுகுறித்து சசிகுமார் நடித்து வரும் ’உடன் பிறப்பே’ படத்தின் இயக்குநர் இரா. சரவணன் தன்னுடைய டிவிட்டர் பக்க்கதில் ‘வென்றால் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுவோம்; தோற்றால், பார்க்கக்கூட மாட்டோம். எல்லோர் இயல்பும் இதுதான் என்றாலும், நல்லோர் இயல்பு வேறல்லவா? ஒலிம்பிக் வாள் சண்டையில் பதக்கம் இழந்த பவானி தேவியை சந்தித்து, தங்க செயின் அளித்து வாழ்த்தி இருக்கிறார் நடிகர் சசிகுமார் .நல்லமனம் வாழ்க ’ எனத் தெரிவித்திருக்கிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes

Nalam PasumaiyagamThoothukudi Business Directory