» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் ஜோ ரூட் முதலிடம்: கோலியை முந்தினார் ரோகித்!

வியாழன் 2, செப்டம்பர் 2021 10:26:38 AM (IST)

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் ஜோ ரூட் முதலிடம் பிடித்துள்ளார். மேலும் கேப்டன்  கோலியை ரோகித் சர்மா முந்தியுள்ளார். 

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை முடிந்துள்ள மூன்று போட்டிகளில் மூன்று சதங்கள் விளாசியுள்ளார்.

இதன்மூலம் ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார். முதல் இடத்தில் இருந்த கேன் வில்லியம்சன் 2-வது இடத்திற்கு சரிந்துள்ளார். ஸ்டீவ் ஸ்மித் 3-வது இடத்திலும், மார்னஸ் லாபஸ்சேன் 4-வது இடத்திலும் உள்ளனர்.

ரோகித் சர்மா ஐந்தாவது இடத்திற்கு முன்னேறிய நிலையில், விராட் கோலி 6-வத இடத்திற்கு சரிந்துள்ளார். பாபர் அசாம், டேவிட் வார்னர், டி காக், ஹென்றி நிக்கோலஸ் முறையே 7 முதல் 10 இடங்களை பிடித்துள்ளனர். நீண்ட நாட்களுக்குப்பின் பின் விராட் கோலி முதல் ஐந்து இடங்களுக்கு கீழ் சரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory