» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

டோக்கியோ பாராலிம்பிக் ஈட்டி எறிதலில் தங்கம் : உலக சாதனை படைத்த இந்திய வீரர்!

திங்கள் 30, ஆகஸ்ட் 2021 5:50:43 PM (IST)



டோக்கியோ பாராலிம்பிக் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் சுமித் அன்டில் தங்கம் வென்றதுடன் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

டோக்கியோ பாராலிம்பிக்கில் இன்று ஆண்களுக்கான ஈட்டி எறிதல் (F64) போட்டி நடைபெற்றது. அதில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட சுமித் அன்டில் அதிகபட்சமாக 68.55 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இதுவரை பாராலிம்பிக்கின் ஆண்கள் ஈட்டி எறிதல் பிரிவில் யாரும் எறியாத தூரம் இது என்பதால், சுமித் அன்டில் உலக சாதனை படைத்தார். 
 
இந்தப் போட்டியில் பங்கேற்ற இன்னொரு இந்தியரான சந்தீப் சவுத்ரி, 62.20 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து நான்காம் இடத்தைப் பிடித்தார். ஆஸ்திரேலியாவின் மைக்கேல் பூரியன் 66.29 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார். இலங்கையின் டுலான் கோடிதுவாக்கா வெண்கலம் வென்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory