» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

சொந்த மண்ணில் 400 டெஸ்ட் விக்கெட்டுகள்: ஆண்டர்சன் சாதனை

சனி 28, ஆகஸ்ட் 2021 5:21:23 PM (IST)சொந்த மண்ணில் 400 டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்து இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் சாதனை படைத்துள்ளார். 

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்கப் போராடி வருகிறது. 4-ம் நாளான இன்று ரஹானேவின் விக்கெட்டை 10 ரன்களில் வீழ்த்தினார் ஜேம்ஸ் ஆண்டர்சன்.இது இங்கிலாந்தில் ஆண்டர்சன் எடுத்துள்ள 400-வது டெஸ்ட் விக்கெட்டாகும். டெஸ்ட் கிரிக்கெட்டில் 630 விக்கெட்டுகளை அவர் எடுத்துள்ளார்.

இதனால் சொந்த மண்ணில் 400 டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்த முதல் வேகப்பந்து வீச்சாளர் என்கிற பெருமையை ஆண்டர்சன் பெற்றுள்ளார்.இதற்கு முன்பு, இலங்கையைச் சேர்ந்த முத்தையா முரளிதரன் சொந்த மண்ணில் அதிகபட்சமாக 493 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். 

சொந்த மண்ணில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகள்

முரளிதரன் - 493 (73 டெஸ்டுகள்)

ஆண்டர்சன் - 400 (94 டெஸ்டுகள்)

கும்ப்ளே - 350 (63 டெஸ்டுகள்)

பிராட் - 341 (85 டெஸ்டுகள்)

வார்னே (319 (69 டெஸ்டுகள்)


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest CakesNalam Pasumaiyagam


Thoothukudi Business Directory