» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட்: தோல்வியை தவிர்க்க இந்தியா போராட்டம்!!

சனி 28, ஆகஸ்ட் 2021 8:27:30 AM (IST)இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டில் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க இந்தியா போராடி வருகிறது. 3-ம் நாள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் எடுத்துள்ளது.

இரு அணிகளுக்கு இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடா் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் டிராவில் முடிந்த நிலையில், லாா்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

லீட்ஸ் ஹெட்டிங்லி மைதானத்தில் மூன்றாவது ஆட்டம் புதன்கிழமை தொடங்கியது. முதலில் ஆடிய இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் வெறும் 78 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ரோஹித் சா்மா மட்டுமே அதிகபட்சமாக 19 ரன்களை சோ்த்தாா். இங்கிலாந்து தரப்பில் ஆண்டா்சன், ஓவா்டன் தலா 3 விக்கெட்டுகளையும், ராபின்சன், சாம் கரன் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினா்.

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 432 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. கேப்டன் ரூட் 121 ரன்கள் எடுத்தார். இதனால் இங்கிலாந்து அணி 354 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்தியத் தரப்பில் ஷமி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இதன்பிறகு 2-வது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்தியா, சிறப்பாக விளையாடி வருகிறது. ராகுல் 8 ரன்களிலும் ரோஹித் சர்மா 59 ரன்களிலும் ஆட்டமிழந்தார்கள். வழக்கத்துக்கு மாறாக விரைவாக ரன்கள் சேர்க்கத் தொடங்கிய புஜாரா 91 ரன்களுடனும் கோலி 45 ரன்களுடனும் களத்தில் உள்ளார்கள். 3-ம் நாள் முடிவில் இந்திய அணி 80 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் எடுத்துள்ளது. 8 விக்கெட் மீதமுள்ள நிலையில் இந்திய அணி 139 ரன்கள் பின்தங்கியுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes
Nalam Pasumaiyagam

Thoothukudi Business Directory