» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் தங்க பதக்கம் : தூத்துக்குடி மாணவருக்கு எஸ்பி பாராட்டு!

ஞாயிறு 22, ஆகஸ்ட் 2021 8:51:26 PM (IST)



மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டியில் தங்க பதக்கம் வென்ற தூத்துக்குடி மாணவர் சந்தோஷ் குருநாதனுக்கு எஸ்பி ஜெயக்கமார் பாராட்டு தெரிவித்தார்.

தூத்துக்குடி தருவை மைதானத்தில் 14.08.2021 அன்று நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டியில் 5 வயதுக்குட்பட்ட பிரிவில் மாநிலம் முழுவதும் இருந்து மொத்தம் 22 மாணவர்கள் போட்டியில் பங்கேற்றனர். இதில் தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனியை சேர்ந்த குருராஜா என்பவரது மகன் சந்தோஷ் குருநாதன் என்ற 5 வயது மாணவன் சிலம்பாட்ட போட்டியில் கலந்துகொண்டு தங்க பதக்கம் வென்றுள்ளார். இவரை பாரட்டும் நிகழ்ச்சி இன்று தூத்துக்குடி சிவன்கோவில் அருகே உள்ள கவிதா மஹாலில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.

அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசுகையில், தங்க பதக்கம் வென்ற சந்தோஷ் குருநாதன் மற்ற மாணவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக திகழ்கிறார். இவர் வருங்காலத்தில் மிகச்சிறந்த சாதனையாளராக விளங்குவார். இந்த சிறுவயதிலேயே பெற்றோர்க்கு பெருமை தேடி தந்துள்ளார். 5 வயதிலேயே நமது பாராம்பரிய கலையான சிலம்பத்தில் தன்னை ஈடுபடுத்தி கொண்டு மிக சிறந்த பயிற்சி பெற்று போட்;டியில் கலந்து கொண்டு தங்க பதக்கம் வென்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு பெருமை தேடிதந்துள்ளார். மேலும் இவர் சிலம்பத்தில் இன்னும் நிறைய கற்றுகொண்டு எதிர்காலத்தில் இதேபோன்று பல போட்டிகளில் கலந்துகொண்டு மென்மேலும் பல வெற்றிகள் பெற வேண்டும் என்று வாழ்த்தினார்.

இந்நிகழ்ச்சியில் சந்தோஷ் குருநாதனின் தந்தை குருராஜா, தாயார் யுவராணி, கீதா செல்வமாரியப்பன், தூத்துக்குடி போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர் மயிலேறும்பெருமாள், மத்தியபாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயபிரகாஷ், உதவி ஆய்வாளர் முருகபெருமாள் மற்றும் சிறுவனின் உறவினர்கள் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam Pasumaiyagam





Black Forest Cakes



Thoothukudi Business Directory