» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

அதிமுக 50வது ஆண்டு பொன்விழா கபாடி போட்டி பரிசளிப்பு விழா

செவ்வாய் 10, ஆகஸ்ட் 2021 10:38:28 AM (IST)



அதிமுக 50வது ஆண்டு பொன் விழா கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு சுழல் கோப்பையை எம்.எல்.ஏ கடம்பூர் செ. ராஜூ மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் ஆகியோர் வழங்கினர்.

அதிமுக 50வது ஆண்டு பொன் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம், பண்டாரவிளையில் மாவட்ட அளவிலான மின்னொளி கபாடி போட்டி நடைப்பெற்றது. 2 நாட்களாக நடைப்பெற்ற போட்டியில் முதல் பரிசு வென்ற ராஜபாளையம் காவல் துறை அணிக்கு ரூ.20 ஆயிரமும் பரிசு தொகையும், சுழல் போப்பையும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கடம்பூர் செ.ராஜூ எம்.எல்.ஏ மற்றும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் ஆகியோர் வழங்கினர்.  தொடர்ந்து 2ம் பரிசு வென்ற பெருங்குளம் சுப்புராஜ் அணிக்கு ரூ.15 ஆயிரமும் 3ம் பரிசு வென்ற பண்டாரவிளை மேசியா அணிக்கு ரூ,10ஆயிரமும் சுழல் கோப்பையும் வழங்கி சிறப்பித்தனர். 

இந்நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட அவைத் தலைவர் திருப்பாற்கடல், மோகன், ஒன்றிய செயலாளர்கள் காசிராஜன், அழகேசன், தாமோதரன், செம்பூர் ராஜ் நாராயணன், விஜயகுமார், சௌந்திரபாண்டி, நகர செயலாளர்கள் வேதமாணிக்கம், மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் வீரபாகு, மாணவரணி பில்லா விக்னேஷ், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் கே.ஜெ.பிரபாகர், தகவல் தொழில்நுட்பப் பிரிவு அருண் ஜெபக்குமார்,  உட்பட பலர் கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பண்டாரவிளை எஸ்.பி.எஸ். ராஜா தலைமையில் பாஸ்கர், பால்துரை, திருத்துவசிங், சுரேஷ், வீரதுரை, பெரியசாமி, சேர்மராஜா, பெருமாள் ஊர் இளைஞர்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam

Black Forest Cakes








Thoothukudi Business Directory