» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஒலிம்பிக்சில் ஆபார ஆட்டம்: இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு முதல்வர் வாழ்த்து

வெள்ளி 6, ஆகஸ்ட் 2021 4:47:08 PM (IST)டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டியில் இந்திய மகளிர் ஹாக்கி அணியினர் இறுதிவரை மனந்தளராது போராடியதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று பாராட்டியுள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பாராட்டு கடிதம் "டோக்கியோ ஒலிம்பிக்சில் இந்திய மகளிர் ஹாக்கி அணியினரின் ஆட்டம் பதக்கம் பெற்ற பிறரின் முயற்சிகளுக்குச் சற்றும் குறைவில்லாதது. முதன்முறையாக ஒலிம்பிக்சின் அரையிறுதிச் சுற்று வரை இந்தியாவைக் கொண்டுசென்றதற்காகவும், பிரிட்டன் அணிக்கு எதிரான போட்டியில் இறுதிவரை மனந்தளராது போராடியதற்காகவும் நமது அணியின் ஒவ்வொரு வீராங்கனையையும் நான் நெஞ்சாரப் பாராட்டுகிறேன். என தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsBlack Forest Cakes
Nalam PasumaiyagamThoothukudi Business Directory