» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகள்: பிசிசிஐ அறிவிப்பு

சனி 29, மே 2021 4:36:27 PM (IST)

கரோனாவால் பாதியிலேயே நின்றுபோன ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

14-வது ஐபிஎல் டி20 தொடர், கரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியிலும் மிகுந்த பாதுகாப்புடன் பயோ-பபுள் சூழலில் நடந்தது. ஆனால், பல்வேறு கட்டப் பரிசோதனை, தனிமைப்படுத்துதல் ஆகியவற்றுக்குப் பின்புதான் பயோ-பபுளுக்குள் வீரர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் முதல் சுற்றுப் போட்டிகள் சுமுகமாகத்தான் சென்றன. ஆனால், 2-வது சுற்று தொடங்கியவுடன் பலர் கரோனாவால் பாதிக்கப்பட்டனர்.  இதனால் ஐபிஎல் தொடர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. 

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் காணொலி வாயிலாக இன்று நடைபெற்றது. இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி தலைமை தாங்கினார். இதில் கரோனா பரவல் காரணமாக ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில், போட்டியை எங்கு நடத்தலாம் என ஆலோசிக்கப்பட்டது. மேலும் இந்தியாவில் நிலவும் கரோனா தொற்றுக்கு மத்தியில் வருங்கால கிரிக்கெட் போட்டிகளை எப்படி நடத்துவது என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்துவது என்று கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் போட்டிகளை நடத்துவது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory