» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஐசிசி டெஸ்ட் தரவரிசை : ரிஷப் பந்த் புதிய சாதனை

புதன் 5, மே 2021 5:29:21 PM (IST)ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 6ஆம் இடத்தை பிடித்துள்ள ரிஷப் பந்த் புதிய சாதனை படைத்துள்ளார். 

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் தொடா்களில் இக்கட்டான நேரங்களில் சிறப்பாக ஆடி ரன் குவித்து இந்திய அணியை காப்பாற்றினாா் இளம் விக்கெட் கீப்பரான ரிஷப் பந்த். இதன்மூலம் இந்திய அணியின் மிடில் ஆா்டரில் தவிா்க்க முடியாத ஒரு வீரராக ரிஷப் பந்த் உருவெடுத்துள்ளாா். இந்நிலையில் இன்று வெளியிடப்பட்டுள்ள ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 6-ம் இடத்துக்கு அவர் முன்னேறியுள்ளார். 

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் கேன் வில்லியம்சன் முதல் இடத்தில் உள்ளார். விராட் கோலி 5-ம் இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார். ரிஷப் பந்த் 6-ம் இடத்தைப் பிடித்து சாதனை செய்துள்ளார். டெஸ்ட் தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் நுழைந்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்கிற பெருமை அவருக்குக் கிடைத்துள்ளது. இந்தியாவின் ரோஹித் சர்மாவும் 6-ம் இடத்தில் உள்ள மூன்று வீரர்களில் ஒருவராக உள்ளார். 6-ம் இடத்தில் நியூசிலாந்தின் ஹென்றி நிகோல்ஸ் உள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsBlack Forest Cakes
Nalam PasumaiyagamThoothukudi Business Directory