» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸிக்கு கரோனா பாதிப்பு

புதன் 5, மே 2021 3:32:59 PM (IST)சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி, கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்.

கரோனா பாதுகாப்பு வளையத்தில் இருந்தும் சில வீரா்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து ஐபிஎல் 2021 போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸியும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கரோனாவின் லேசான அறிகுறிகள் இருந்தாலும் டெல்லியில் உள்ள தங்கும் விடுதியில் 10 நாள்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்த 3வது நபர், ஹஸ்ஸி. இதற்கு முன்பு பந்துவீச்சுப் பயிற்சியாளர் எல். பாலாஜியும் பேருந்துப் பராமரிப்பாளரும் கரோனாவால் பாதிக்கப்பட்டார்கள். இந்தச் சூழலில் சிஎஸ்கே அணியைச் சேர்ந்த வீரர்கள், நிர்வாகிகள் அனைவரும் டெல்லியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். 

முன்னதாக கொல்கத்தா நைட் ரைடா்ஸ் வீரா்கள் வருண் சக்கரவா்த்தி, சந்தீப் வாரியா் ஆகியோருக்கும், சென்னையின் பந்துவீச்சுப் பயிற்சியாளா் எல்.பாலாஜிக்கும் கரோனா உறுதியான நிலையில், டெல்லி கேபிடல்ஸ் வீரா் அமித் மிஸ்ரா, சன்ரைசா்ஸ் ஹைதராபாத் வீரா் ரித்திமான் சாஹா ஆகியோருக்கும் கரோனா பாதிப்பு இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதியானது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes
Nalam Pasumaiyagam

Thoothukudi Business Directory