» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
சென்னையில் 2 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள்: இங்கிலாந்து அணி அறிவிப்பு
வெள்ளி 22, ஜனவரி 2021 3:47:12 PM (IST)

சென்னையில் நடைபெற உள்ள முதல் 2 டெஸ்ட் ஆட்டங்களுக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டுகள், 5 டி20, 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. முதல் இரு டெஸ்டுகள் சென்னையில் பிப்ரவரி 5 முதல் 9 வரையும், பிப்ரவரி 13 முதல் 17 வரையும் நடைபெறுகின்றன. 3-ஆவது டெஸ்ட் பிப்ரவரி 24 முதல் 28 வரையும், கடைசி டெஸ்ட் மாா்ச் 4 முதல் 8 வரையும் ஆமதாபாதில் நடைபெறவுள்ளது. இதையடுத்து 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் ஆமதாபாத்திலும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் புணேவிலும் நடைபெறவுள்ளன.
முதல் இரு டெஸ்டுகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட நிலையில் சென்னை டெஸ்ட் ஆட்டங்களுக்கான இங்கிலாந்து அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜானி பேர்ஸ்டோவ், சாம் கரண், மார்க் வுட் ஆகியோர் சென்னை டெஸ்டுகளில் இடம்பெறவில்லை. ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸ், ரோரி பர்ன்ஸ் ஆகியோர் டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.
இங்கிலாந்து அணி: ஜோ ரூட் (கேப்டன்), ஆர்ச்சர், மொயீன் அலி, ஜேம்ஸ் ஆண்டர்சன், டாம் பெஸ், ஸ்டூவர்ட் பிராட், ரோரி பர்ன்ஸ், ஜாஸ் பட்லர், ஸாக் கிராவ்லி, பென் ஃபோக்ஸ், டான் லாரன்ஸ், ஜேக் லீச், டாம் சிப்லி, பென் ஸ்டோக்ஸ், ஒல்லி ஸ்டோன், கிறிஸ் வோக்ஸ்.மாற்று வீரர்கள்: ஜேம்ஸ் பிரேசி, மாசன் கிரேன், சகிப் முகமது, மேத்யூ பார்கின்சன், ஒல்லி ராபின்சன், அமர் விர்டி. முதல் டெஸ்ட் முடிந்த பிறகு பட்லர், நாடு திரும்புகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஐ.பி.எல். கிரிக்கெட் ஏப்ரல் 9-ம் தேதி தொடங்குகிறது: போட்டி அட்டவணை வெளியீடு
திங்கள் 8, மார்ச் 2021 8:26:55 AM (IST)

ஐ.சி.சி. தரவரிசையில் இந்தியா முதலிடத்துக்கு முன்னேற்றம்
ஞாயிறு 7, மார்ச் 2021 9:05:08 AM (IST)

அஸ்வினுக்கு 8-வது முறையாக தொடர்நாயகன் விருது
ஞாயிறு 7, மார்ச் 2021 9:00:00 AM (IST)

அஸ்வின், அக்ஷர் மீண்டும் அசத்தல்: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா!!
சனி 6, மார்ச் 2021 4:06:40 PM (IST)

வீரர்களுக்கு கரோனா பாதிப்பு: பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டி தள்ளிவைப்பு
வெள்ளி 5, மார்ச் 2021 12:00:34 PM (IST)

ஐ.பி.எல். பயிற்சி முகாம்: தோனி சென்னை வருகை!!
வெள்ளி 5, மார்ச் 2021 11:27:26 AM (IST)
