» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

கடினமான இலங்கை விரட்டி வெற்றி: இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்த அயர்லாந்து!!

புதன் 5, ஆகஸ்ட் 2020 10:41:15 AM (IST)329 ரன்கள் என்கிற கடுமையான இலக்கை எதிர்கொண்டபோதும் 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி அதிர்ச்சியளித்துள்ளது அயர்லாந்து அணி.

அயர்லாந்துக்கு எதிரான முதல் இரு ஒருநாள் ஆட்டங்களிலும் வென்று ஒருநாள் தொடரைக் கைப்பற்றிய இங்கிலாந்து அணி, செளதாம்ப்டனில் நடைபெற்ற 3-வது ஒருநாள் ஆட்டத்தில் முதலில் விளையாடியது. கேப்டன் மார்கன் 106 ரன்களும் பேண்டன் 58 ரன்களும் வில்லி 51 ரன்களும் எடுத்ததால் 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 328 ரன்கள் குவித்தது இங்கிலாந்து அணி . இதன்பிறகு பேட்டிங் செய்த அயர்லாந்து அணி பேட்ஸ்மேன்கள் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை அருமையாக எதிர்கொண்டார்கள்.

தொடக்க வீரர் ஸ்டிர்லிங் 128 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 142 ரன்கள் எடுத்து அசத்தினார். கேப்டன் ஆண்டி பால்பிர்னி 112 பந்துகளில் 12 பவுண்டரிகளுடன் 113 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு மற்றொரு முக்கியக் காரணமாக அமைந்தார். கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்டது. அதை 5 பந்துகளில் எடுத்து வெற்றியடைந்தது அயர்லாந்து அணி. 49.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 329 ரன்கள் எடுத்து இங்கிலாந்து எதிரான 3-வது ஒருநாள் ஆட்டத்தை வென்று அதிர்ச்சியளித்துள்ளது.
2-1 என ஒருநாள் தொடரைக் கைப்பற்றியுள்ளது இங்கிலாந்து. ஸ்டிர்லிங் ஆட்ட நாயகனாகவும் டேவிட் வில்லி தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes

Anbu CommunicationsThoothukudi Business Directory