» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஐசிசி டெஸ்ட் தரவரிசை: முதலிடத்தை இழந்த இந்திய அணி

வெள்ளி 1, மே 2020 12:43:07 PM (IST)

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 2016 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதல் முறையாக இந்திய அணி முதலிடத்தை இழந்துள்ளது.

ஐசிசி நிர்வாகம் சர்வதேச டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இதில் முதலிடத்தில் இருந்த இந்திய அணி தற்போது  மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. முதலிடத்தை ஆஸ்திரேலிய அணி பிடித்துள்ளது. 2ஆம் இடத்தில் நியூசிலாந்து அணி பிடித்துள்ளது. முதல் மூன்று இடத்தில் உள்ள அணிகளுக்கு வித்தியாசம் ஒரு புள்ளி மட்டும் தான்.

ஆஸ்திரேலிய அணி 116 ரேட்டிங் உடன் ஆஸ்திரேலிய அணி முதலிடத்திலும், அதற்கு அடுத்தபடியாக 115 ரேட்டிங்குடன் நியூசிலாந்து 2ஆம் இடத்திலும், 3ஆம் இடத்தில் இந்தியா 114 ரேட்டிங்கை பெற்றும் உள்ளன. அதைத்தொடர்ந்து இங்கிலாந்து (105), இலங்கை (91), தென்னாப்பிரிக்கா (90), பாகிஸ்தான் (86), வெஸ்ட் இண்டீஸ் (79) அணிகள் இடம்பெருகின்றன.
 
இந்திய அணி 2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் தொடர்ந்து டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் இருந்து வருகிறது. இந்நிலையில் மூன்றரை வருடங்களுக்குப் பின்னர் முதலிடத்தை இழந்துள்ளது. அதுவும் 2 புள்ளிகள் வித்தியாசத்தில் இழந்துள்ளது.  2003ஆம் ஆண்டு முதல் டெஸ்ட் தரவரிசை கணக்கிடப்பட்டு வருகிறது. இதில் முதல் 3 இடத்தில் இருக்கும் அணிகள் ஒரு புள்ளி இடைவெளியுடன் இருப்பது இது 2- வது முறையாகும். இதற்கு முன்பு 2016ஆம் ஆண்டு ஜனவரியில் இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் முறையே ஒரு புள்ளி இடைவெளியுடன் முதல் மூன்று இடத்தை பிடித்தன என்பது நினைவுகூறத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Black Forest Cakes





Anbu Communications




Thoothukudi Business Directory