» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

கரோனா வைரஸ் தொற்றால் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் உயிரிழப்பு

செவ்வாய் 14, ஏப்ரல் 2020 10:50:37 AM (IST)

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸஃபார் சர்ஃபராஸ் கரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளார்.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 1 லட்சத்துக்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 10,400 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இதுவரை கரோனா வைரஸால் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளார்கள்.

1988-ல் தொழில்முறை கிரிக்கெட்டில் அறிமுகமான பாகிஸ்தான் வீரர் ஸஃபார் சர்ஃபராஸ், கரோனா வைரஸ் தொற்றால் பெஷாவரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் 50 வயது சர்ஃபராஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவர், கரோனா வைரஸால் உயிரிழந்த முதல் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்.

இடக்கை பேட்மேனான சர்ஃபராஸ், 15 முதல் தர கிரிக்கெட் ஆட்டங்களில் விளையாடி 616 ரன்கள் எடுத்துள்ளார். 6 லிஸ்ட் ஏ ஆட்டங்களிலும் விளையாடியுள்ளார். 1994-ல் ஓய்வு பெற்றார். இதன்பிறகு பயிற்சியாளராகப் பணியாற்றினார். இவருடைய சகோதரர் அக்தர் சர்ஃபராஸ் சமீபத்தில் புற்றுநோய் காரணமாக மரணமடைந்தார். அவர் பாகிஸ்தான் அணிக்காக 4 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.   


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes
Anbu Communications

Thoothukudi Business Directory