» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் : ஐபிஎல் போட்டிகள் ரத்தாகுமா?

வெள்ளி 6, மார்ச் 2020 4:36:14 PM (IST)

கரோனா வைரஸ் உலகம் முழுவதையும் உலுக்கி வரும் நிலையில், இந்தியாவில் ஐபிஎல் தொடர் திட்டமிட்டபடி நடக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளன.

கரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. சீனாவில் இருந்து பரவ தொடங்கிய இந்த கொடிய வைரஸ் உலகம் முழுவதும் உயிர்பலி வாங்கி வருகிறது. சீனாவில் மட்டும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதிலும் கிட்டதட்ட  90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

கரோனா வைரஸ், சீனாவுக்கு வெளியே 17 மடங்கு வேகமாக பரவுவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. மொத்தம் 85 நாடுகளில் கரோனா வைரஸ் பரவியுள்ளது. இந்தியாவில் மட்டும் கரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 31 ஆக  உள்ளது.  வெளிநாடுகளிலிருந்து வருவோர் மூலம் கரோனா பரவுவதால், சீனா, இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு பயண தடை விதிக்கப்பட்டுள்ளது. 

கரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில், பொது இடங்களில் மக்கள் கூட வேண்டாம் என்று மத்திய சுகாதாரத்து மற்றும் குடும்ப நல அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. தவிர்க்க முடியாத நிகழ்ச்சிகளின் போது போதுமான முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும் எனவும் சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. 

இத்தகைய சூழலில், இந்திய கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடப்பு ஆண்டு திட்டமிட்ட படி நடக்குமா? என்று சந்தேகங்கள் எழுந்துள்ளன. ஏனெனில், ஐபிஎல் போட்டிகளைக் காண ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் மைதானத்தில் திரள்வார்கள்.  அதுபோக, வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள், பயிற்சியாளர்கள் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க வருவார்கள். எனவே, போதுமான முன்னெச்சரிக்கைகளுடன் ஐபிஎல் போட்டிகள் நடத்த வேண்டியது அவசியம்.  

இந்த நிலையில், ஐபிஎல் போட்டிகள் நிச்சயம் நடக்கும் என்று தெரிவித்துள்ள பிசிசிஐ தலைவர் கங்குலி, ”முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளுடன் ஐபிஎல் நடக்கும்” என்றார். கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக  இத்தாலியில் சீரி ஏ கால்பந்து போட்டிகள் ரசிகர்கள் இல்லாமலேயே மூடப்பட்ட கதவுகளுக்குள் நடைபெற்று வருகின்றன. அதேபோல்,  வரும் ஜூலை 4 ஆம் தேதி தொடங்க உள்ள ஜப்பான் ஒலிம்பிக் போட்டிகள் திட்டமிட்டபடி  நடக்குமா? என்பதும் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. இதனிடையே ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் வரும் 29 ஆம் தேதி தொடங்கி  மே 24 ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக ஏற்கனவே அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது  குறிப்பிடத்தக்கது..a


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes


Friends Track CALL TAXI & CAB (P) LTDAnbu CommunicationsThoothukudi Business Directory