» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஐபிஎல் பரிசுத்தொகையை பாதியாக குறைத்தது பிசிசிஐ

புதன் 4, மார்ச் 2020 3:42:16 PM (IST)

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் தொடரில் வெற்றி பெறும் அணிகளுக்கான பரிசுத் தொகையை பிசிசிஐ பாதியாக குறைத்துள்ளது.

13-வது ஐ.பி.எல். டி-20 கிரிக்கெட் தொடர் வரும் 29-ம் தேதி தொடங்குகிறது. வான்கடே மைதானத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சுடன் மோதுகிறது. 8 அணிகளுக்கு இடையான போட்டியில் தரவரிசையில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும்.  இதையடுத்து ஐ.பி.எல். போட்டிகளின் இறுதி ஆட்டம் மே மாதம் 24-ம் தேதி நடைபெற உள்ளது. 

கடந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற அணிக்கு ரூ.20 கோடியும், இரண்டாவது இடம் பிடித்த  அணிக்கு ரூ. 12.5 கோடியும், 3-வது மற்றும் 4-வது இடம் பிடித்த அணிகளுக்கு தலா ரூ.8.75 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான (2020) ஐ.பி.எல். பரிசுத்தொகையில் பிசிசிஐ அதிரடி மாற்றம் கொண்டுவந்துள்ளது. அதன்படி சாம்பியன் பட்டம் பெறும் அணி உள்பட தரவரிசையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு வழங்கப்படும் பரிசுத்தொகை பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. 

பிசிசிஐ அறிவித்துள்ள புதிய பரிசுத்தொகை விவரத்தின் படி 2020-ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் சாம்பியன் பட்டம் பெறும் அணிக்கு 10 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும். இரண்டாவது இடம் பிடிக்கும் அணிக்கு 6.25 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது. அதேபோல் 3-வது மற்றும் 4-வது இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு தலா 4.375 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது. மேலும், ஐ.பி.எல். போட்டிகளை நடத்தும் ஒவ்வொரு மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கும் தலா ஒரு கோடி ரூபாய் வழங்கப்பட உள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Black Forest Cakes


Friends Track CALL TAXI & CAB (P) LTD






Thoothukudi Business Directory