» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஐசிசி ஒருநாள் போட்டி தரவரிசை: முதலிடத்தை இழந்தார் பும்ரா; தக்கவைத்தார் கோலி!!

வியாழன் 13, பிப்ரவரி 2020 11:06:17 AM (IST)

ஐசிசி ஒருநாள் போட்டி பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் கேப்டன் விராட் கோலி முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். அதேவேளையில் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் ஜஸ்பிரித் பும்ரா முதலிடத்தை இழந்துள்ளார்.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் பேட்ஸ்மேன்கள், பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி869 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கிறார். நியூஸிலாந்து அணிக்கு எதிரான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் விராட் கோலி 75 ரன்கள் மட்டுமே சேர்த்த போதிலும் அது தரவரிசையில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

ரோஹித் சர்மா (855), பாபர் அஸம் (829) முறையே 2, 3-வது இடங்களில் உள்ளனர். நியூஸிலாந்தின் ராஸ் டெய்லர் 828 புள்ளிகளுடன் ஒரு இடம் முன்னேறி 4-வது இடத்தை பிடித்துள்ளார். இந்தியாவுக்கு எதிரான தொடரில் ராஸ் டெய்லர் 194 ரன்கள் விளாசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் ஜஸ்பிரித் பும்ரா 719 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்து 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். நியூஸிலாந்து தொடரில் பும்ராவின் பந்து வீசசு எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் போனது. 3 ஆட்டங்களிலும் மொத்தமாக 30 ஓவர்களை வீசிய பும்ரா 167 ரன்களை விட்டுக்கொடுத்த நிலையில் விக்கெட் எதையும் கைப்பற்றவில்லை.

நியூஸிலாந்தின் டிரென்ட் போல்ட் 727 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளார். ஆப்கானிஸ்தானின் முஜீப் உர் ரஹ்மான் (701), தென் ஆப்பிக்காவின் காகிசோ ரபாடா (674), ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ் (673) ஆகியோர்முறையே 3 முதல் 5-வது இடங்களில் உள்ளனர். ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையில் ஆப்கானிஸ்தானின் மொகமது நபி முதலிடத்தை பிடித்துள்ளார். ரவீந்திர ஜடேஜா 3 இடங்கள் முன்னேறி 7-வது இடத்தை அடைந்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsAnbu Communications

Friends Track CALL TAXI & CAB (P) LTD

Black Forest Cakes

Thoothukudi Business Directory