» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

வெற்றிக் களிப்பில் வங்கதேச வீரர்கள் அநாகரீகம்: ஐசிசி கண்டனம்

திங்கள் 10, பிப்ரவரி 2020 5:14:27 PM (IST)19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதி ஆட்டத்தில் அநாகரீகமாக நடந்து கொண்ட வங்கதேச வீரர்கள் மீது ஐசிசியின் நடவடிக்கை பாயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

நேற்று நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் பெற்றது. இந்த நிலையில் நேற்றைய போட்டி முடிந்து வெற்றி பெற்றவுடன் வங்கதேச அணியினர் மைதானத்துக்குள் நுழைந்து தங்களது வெற்றியை கொண்டாடினார்கள். அதுமட்டுமின்றி மைதானத்தில் இருந்த இந்திய வீரர்களிடம் அவர்கள் அநாகரிகமாக நடந்து கொண்டதாகவும் தெரிகிறது. இது குறித்த வீடியோ காட்சிகளை பார்த்த இந்திய அணியின் நிர்வாகிகள் இதுகுறித்து ஐசிசியிடம் புகார் அளித்துள்ளது. ஐசிசி உறுப்பினர்கள் மற்றும் அம்பயர்கள் அந்த வீடியோ காட்சிகளை பார்த்து வங்கதேச அணிக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்து வங்கதேச அணியின் கேப்டன் அக்பர் அலி இதுகுறித்து கூறியபோது ’வெற்றி உற்சாகத்தில் எங்கள் அணியினர் தவறாக நடந்து கொண்டிருக்கலாம். அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். கிரிக்கெட் என்பது ஒரு ஜென்டில்மேன் விளையாட்டு என்பதால் கண்டிப்பாக எதிரணியினருக்கு மரியாதை கொடுக்க வேண்டியது அவசியம். எங்கள் அணி வீரர்கள் மைதானத்தில் என்ன செய்தார்கள் என்பது எனக்கு தெரியாது. இருப்பினும் அவர்கள் தவறு செய்திருந்தால் அவர்களுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார். இருப்பினும் இந்திய அணி நிர்வாகிகள் வங்கதேச அணியினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐசிசியிடம் புகார் அளித்து உள்ளதால் அநாகரீகமாக நடந்து கொண்ட வீரர்கள் மீது நடவடிக்கை பாயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது


மக்கள் கருத்து

ப. சுகுமார்Feb 12, 2020 - 03:01:43 AM | Posted IP 162.1*****

'எங்கள் அணி வீரர்கள் என்ன செய்தார்கள்? எனதமக்கு தெரியாது' என்று வங்கதேச அணியின் கேப்டன் சொல்வது வேடிக்கை. வங்கதேச அணியினரின் செய்கைகளை உலகமே பார்த்துக்கொண்டிருந்தது. அநாகரீகமாக நடந்துகொண்ட வங்கதேச அணிக்கு ஐசிசி தண்டனை கொடுக்க வேண்டும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

Anbu Communications


Friends Track CALL TAXI & CAB (P) LTD


Thoothukudi Business Directory