» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

வீரர்கள் ஒப்பந்தப் பட்டியலிலிருந்து தோனி பெயர் நீக்கம்: பிசிசிஐ அதிரடி

வியாழன் 16, ஜனவரி 2020 4:01:48 PM (IST)

இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் வீரர்கள் ஒப்பந்தப் பட்டியலில் இருந்து மகேந்திர சிங் தோனி நீக்கப்பட்டுள்ளார்.

அக்டோபர் 2019 - செப்டம்பர் 2020 வரையிலான ஒப்பந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது பிசிசிஐ. இதில், ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதத்தில் பிசிசிஐ ஒப்பந்தப் பட்டியலில் தோனியின் பெயர் இடம்பெறவில்லை.  கடந்த வருட பிசிசிஐ ஒப்பந்தத்தில் ஏ கிரேடில் இடம்பெற்ற தோனிக்கு ஆண்டு ஊதியமாக ரூ. 5 கோடி வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த வருடம் கிரேட் ஏ+, கிரேட் ஏ, கிரேட் பி, கிரேட் சி, என எந்தப் பிரிவிலும் தோனியின் பெயர் இடம்பெறவில்லை. இதையடுத்து பிசிசிஐயின் இந்த நடவடிக்கைக்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். 

2019 உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு தொடர்ந்து ஓய்வில் உள்ளார் தோனி. கடைசியாக ஜூலை 10 அன்று நியூஸிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை அரையிறுதிச் சுற்றில் தோனி விளையாடினார். எனினும் மார்ச் இறுதியில் தொடங்கவுள்ள ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி சார்பாக தோனி விளையாடவுள்ளார். இதில் நன்றாக விளையாடினால் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் அவர் இடம்பெற வாய்ப்புள்ளது என்று இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes


Anbu CommunicationsThoothukudi Business Directory