» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

இந்திய அணி சிறப்பான பந்துவீச்சு : 150 ரன்களுக்கு சுருண்டது வங்கதேசம்!!

வியாழன் 14, நவம்பர் 2019 3:24:45 PM (IST)இந்தூரில் நடந்துவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வங்கதேச அணி 150 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டி கொண்ட டி20 தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்தியா - வங்கதேசம் அணிகள் இடையேயான 2 டெஸ்ட் போட்டி தொடரில் முதல் டெஸ்ட் மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் இன்று தொடங்கியது. வங்காளதேச கேப்டன் மொமினுல் ஹக் ‘டாஸ்’ வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணி 6 பேட்ஸ்மேன்கள் (விக்கெட் கீப்பரையும் சேர்த்து), 5 பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கியது. இதேபோல் விக்கெட் கீப்பரிலும் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.

இம்ருல் கெய்சும், ‌ஷத்மன் இஸ்லாமும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இந்திய வீரர்களின் அபார பந்து வீச்சால் தொடக்க வீரர்கள் எளிதில் ஆட்டம் இழந்தனர். இம்ருல் கெய்ஸ் 6 ரன்னில் உமேஷ் யாதவ் பந்திலும், ‌ஷத்மன் 6 ரன்னில் இஷாந்த் சர்மா பந்திலும் ஆட்டம் இழந்தனர். அடுத்து வந்த மிதுன் 10 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனால் வங்காளதேசம் 31 ரன்னுக்குள் மூன்று விக்கெட்டுக்களை இழந்தது. 4-வது விக்கெட்டுக்கு கேப்டன் மொமினுல் ஹக் உடன் அனுபவ வீரர் முஷ்பிகுர் ரஹிம் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக விளையாடியது. இதனால் மதியம் உணவு இடைவேளை வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டது.

முதல்நாள் மதிய உணவு இடைவேளை வரை வங்காளதேசம் 3 விக்கெட் இழப்பிற்கு 63 ரன்கள் எடுத்திருந்தது. மொமினுல் ஹக் 22 ரன்னுடனும், முஷ்பிகுர் ரஹிம் 14 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். மதிய உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியதும் இருவரும் இன்னிங்சை சிறப்பாக தொடங்கினர். இந்த ஜோடியை அஸ்வின் பிரித்தார். அணியின் ஸ்கோர் 99 ரன்னாக இருக்கும் போது மொமினுல் ஹக் 37 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மெஹ்முதுல்லா 10 ரன்னில் அஸ்வின் பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்தார். இதனால் 115 ரன்னுக்குள் ஐந்து விக்கெட்டுக்களை இழந்தது.

6-வது விக்கெட்டுக்கு முஷ்பிகுர் ரஹிம் உடன் லிட்டன் தாஸ் ஜோடி சேர்ந்தார். முஷ்பிகுர் ரஹிம் 43 ரன்னிலும், மெஹிதி ஹசன் ரன்ஏதும் எடுக்காமலும் முகமது ஷமி பந்தில் ஆட்டமிழந்தனர். வங்காளதேச அணி 7 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்திருக்கும்போது தேனீர் இடைவேளை விடப்பட்டது.  தேனீர் இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கிய முதல் பந்திலேயே லிட்டன் தாஸ் ஆட்டமிழந்தார். தைஜுல் இஸ்லாமை ஜடேஜா ரன்அவுட் ஆக்க, அபு ஜயத்தை உமேஷ் யாதவ் க்ளீன் போல்டாக்க வங்காளதேசம் 150 ரன்னில் சுருண்டது. இந்திய அண சார்பில் முகமது ஷமி 3 விக்கெட்டும் அஸ்வின், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினர். பின்னர் இந்தியா முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


Black Forest Cakes

Anbu Communications
Thoothukudi Business Directory