» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ரோகித் அதிரடி: 2வது டி20 போட்டியில் வெற்றி வங்கதேசத்தை பந்தாடியது இந்தியா

வெள்ளி 8, நவம்பர் 2019 10:28:48 AM (IST)

ரோகித் சர்மா அதிரடியில் இந்தியா வங்கதேசத்தை மிரட்டியது. இதையடுத்து 15.4 ஓவர்களிலேயே இந்தியா வங்கதேசத்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

வங்கதேசத்துடனான முதல் போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. அதனால் 2வது போட்டியை வெல்லும் முனைப்புடன் நேற்று களமிறங்கிய இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.  தொடரை கைப்பற்றும் முனைப்பில் வங்கதேச அணியிலும் பெரிய மாற்றமின்றி நேற்று களம் கண்டது. டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் களமிறங்கியது. நன்றாக விளையாடிய தொடக்க ஆட்டக்காரர்கள் லிட்டன் தாஸ், முகமது நயிம் இணைந்து 5.4 ஓவரில் 50 ரன்னை கடந்தனர். போட்டியின் 6வது ஓவரில் லிட்டன்தாசை அவுட்டாக்கும் வாய்ப்பு நோ பாலால் வீணானது. அதனால் இன்னும் ரன் குவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட அந்த இணையில் லிட்டன் தாசை ரன் அவுட்டாக்கினார் .

அப்போது லிட்டன் தாஸ் 21 பந்துகளில் 29 ரன் எடுத்து ஆட்டமிழந்த போது அணியின் ஸ்கோர் 7.2ஓவரில்  60 ரன். வங்கதேசம் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 153 ரன் எடுத்தது. இரண்டாவதாக களமிறங்கிய இந்திய துணி துவக்க ஆட்டக்காரர் கேப்டன் ரோகித் சர்மா, ஆரம்பத்திலேயே வாணவேடிக்கை நிகழ்த்தினார். குறிப்பாக ஷிகார் அமைதி காக்க, ரோகித்தின் ருத்ரதாண்டவம் ஆடினார். ஒரு கட்டத்தில் அவரது ேபட்டிங் ஸ்டிரைக் ரேட் 200 கடந்தது. இந்நிலையில் 6 பவுண்டரி, 6 சிக்ஸர் உள்பட 43 பந்தில் 85 ரன் எடுத்து அவுட் ஆனார். அதன் பின்னர் களமிறங்கிய ஐயர் 23 பந்தில் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரி அடித்து அசத்தினார். முடிவில் இந்தியா 15.4 ஓவர்களில் 154 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி ெபற்றது.அதிரடியாக விளையாடி 85 ரன்களை குவித்த ரோகித் சர்மா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

தமிழ் நடிகையை மணந்தார் மணிஷ் பாண்டே!!

செவ்வாய் 3, டிசம்பர் 2019 5:47:40 PM (IST)

Sponsored Ads

Nalam Pasumaiyagam

CSC Computer Education

Black Forest Cakes

Anbu Communications


Thoothukudi Business Directory