» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

டெஸ்ட் போட்டியில் 300 ரன்களுக்கு மேல் எடுத்து ரோஹித் மற்றும் மயங்க் சாதனை

வியாழன் 3, அக்டோபர் 2019 3:54:19 PM (IST)



டெஸ்ட் போட்டியில் 300 ரன்களுக்கு மேல் சேர்ந்து  ரோஹித் மற்றும் மயங்க் இணை புதிய சாதனை படைத்துள்ளது.

இந்தியாவுக்கு வந்துள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வது என முடிவு செய்தது.  இதனை தொடர்ந்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மா மற்றும் மயங்க் அகர்வால் விளையாட தொடங்கினர்.

இதில் உணவு இடைவேளை வரை விக்கெட் இழப்பின்றி இந்திய அணி 91 ரன்கள் எடுத்திருந்தது.  ரோஹித் சர்மா (5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள்) 84 பந்துகளில் அரை சதமும், (10 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்கள்) 154 பந்துகளில் சதமும் நிறைவு செய்துள்ளார்.  இதன்பின் இந்திய அணி 35.3 ஓவர்களில் 100 ரன்களும் 47.5 ஓவர்களில் 150 ரன்களும் எடுத்திருந்தது.இந்திய அணி 59.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 202 ரன்கள் (ரன்ரேட் 3.41) சேர்த்து இருந்த நிலையில் முதல் நாள் ஆட்டம் முடித்து கொள்ளப்பட்டது. 

இதன்பின்பு தொடர்ந்து 2வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது.  இதில் இந்தியாவின் மயங்க் அகர்வால் தனது முதல் சதத்தினை பூர்த்தி செய்துள்ளார்.  அவர் 204 பந்துகளில் (13 பவுண்டரிகள், 2 சிக்சர்கள்) 100 ரன்களை எடுத்துள்ளார்.  75 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 264 ரன்கள் எடுத்திருந்தது. இந்த டெஸ்ட் போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக இறங்கிய ரோஹித் 176 (244 பந்துகள், 23 பவுண்டரிகள், 6 சிக்சர்கள்) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து உள்ளார்.  இதேபோன்று டெஸ்ட் போட்டியில் மயங்க் முதன்முறையாக விளையாடுகிறார்.  இவர்கள் இருவரும் சேர்ந்து தொடக்க ஆட்டக்காரர்களாக 300 ரன்களுக்கு மேல் சேர்த்துள்ளனர்.  

ரோஹித் ஆட்டமிழந்தபொழுது இந்த இணை 317 ரன்களை எடுத்திருந்தது.  இதற்கு முன் வினூ மேன்கட் மற்றும் பங்கஜ் ராய் இணை 413 ரன்கள் (கடந்த 1956ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான போட்டி) மற்றும் வீரேந்தர் சேவாக் மற்றும் ராகுல் டிராவிட் இணை 410 ரன்கள் (கடந்த 2006ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி) எடுத்தனர். இதனால் அவர்களுக்கு அடுத்த நிலையில் 300 ரன்களுக்கு மேல் எடுத்த 3வது தொடக்க ஆட்டக்கார இணையாக ரோஹித் மற்றும் மயங்க் உள்ளனர்.  கடந்த 2018ம் ஆண்டு டிசம்பரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தனது முதல் போட்டியில் விளையாட தொடங்கிய மயங்க் இன்று தனது முதல் சதத்தினை பூர்த்தி செய்துள்ளார்.  டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த 86வது இந்திய வீரராகவும் அவர் உள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


CSC Computer Education



Nalam Pasumaiyagam

Black Forest Cakes

Anbu Communications




Thoothukudi Business Directory