» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

டான் பிராட்மேனின் 71 வருடச் சாதனையை முறியடித்த ஸ்டீவ் ஸ்மித்!

சனி 14, செப்டம்பர் 2019 3:40:35 PM (IST)ஆஷஸ் டெஸ்ட் தொடரின் கடைசி டெஸ்டிலும் சிறப்பாக விளையாடி டான் பிராட்மேனின் சாதனையை ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் முறியடித்துள்ளார்.

ஒருவருடத் தடைக்குப் பிறகு டெஸ்டுகளில் விளையாடி வரும் ஆஷஸ் தொடரில் ஸ்மித் எடுத்த ஸ்கோர்கள் - 144, 142, 92, 211, 82 மற்றும் 80. அதாவது ஆறு இன்னிங்ஸில் 751 ரன்கள். இது ஒரு பெரிய சாதனைக்குக் காரணமாகியுள்ளது. தொடர்ச்சியாக 10 ஆஷஸ் இன்னிங்ஸில் பிராட்மேன் 1236 ரன்கள் எடுத்தது இதற்கு முன்பு சாதனையாக இருந்தது.1937-46 வரையிலான காலகட்டத்தில் அவர் இந்த ரன்களை எடுத்துள்ளார். ஆனால் ஸ்மித், கடந்த 10 ஆஷஸ் இன்னிங்ஸ்களில் 1251 ரன்கள் எடுத்து பிராட்மேனின் சாதனையை வீழ்த்தியுள்ளார். 

பிராட்மேன் - 10 ஆஷஸ் இன்னிங்ஸ்களில் எடுத்த ஸ்கோர்கள்:

212, 169, 51, 144, 18, 102, 103, 16, 187, 234.

ஸ்டீவ் ஸ்மித் - 10 ஆஷஸ் இன்னிங்ஸ்களில் எடுத்த ஸ்கோர்கள்:

239, 76, 102, 83, 144, 142, 92, 211, 82, 80.

எனினும் பிராட்மேனின் மிகப்பெரிய சாதனை ஒன்றை ஸ்மித்தால் வீழ்த்தமுடியுமா எனத் தெரியவில்லை. ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் (974 ரன்கள்) எடுத்த வீரர் என்கிற பெருமை பிராட்மேனுக்கு உண்டு. இந்தச் சாதனையை வீழ்த்த ஸ்மித், இந்த டெஸ்டின் 2-வது இன்னிங்ஸில் 224 ரன்கள் எடுக்கவேண்டும். இதுதவிர நேற்று, மேலும் ஒரு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார் ஸ்மித்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக ஆறு தடவை 80+ ரன்கள் எடுத்த இரண்டாவது வீரர் (சர் எவர்டன் வீக்ஸுக்குப் பிறகு) என்கிற பெருமையை அடைந்துள்ளார் ஸ்மித்.  அதேபோல ஓர் அணிக்கு எதிராகத் தொடர்ச்சியாக 10 தடவை 50+ ரன்கள் எடுத்த முதல் வீரர் என்கிற சாதனையையும் ஸ்மித் படைத்துள்ளார். இங்கிலாந்து எதிராக விளையாடிய ஆஷஸ் தொடர்களில் கடைசி 10 இன்னிங்ஸ்களிலும் அவர் அரை சதங்களை எட்டியுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

Nalam Pasumaiyagam

Anbu Communications

CSC Computer EducationThoothukudi Business Directory