» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டி: 4 பந்தில் 4 விக்கெட் வீழ்த்தி மலிங்கா சாதனை

சனி 7, செப்டம்பர் 2019 3:58:35 PM (IST)நியூசிலாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டியில் நான்கு பந்தில் நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தியதுடன் 100 விக்கெட்டுக்கள் கைப்பற்றி சாதனைப் படைத்துள்ளார்.

இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி பல்லேகெலேயில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை 8 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் சேர்த்தது. பின்னர் 126 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களம் இறங்கியது. 3-வது ஓவரை மலிங்கா வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தில் கொலின் முன்றோ க்ளீன் போல்டானார். இந்த விக்கெட்  மூலம் டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுக்களை கைப்பற்றிய முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.
 
அடுத்து வந்த ருதர்போர்டு ரன்ஏதும் எடுக்காமல் எல்பிடபிள்யூ ஆனார். அடுத்து வந்த கிராண்ட்ஹோமை  க்ளீன் போல்டாக்கினார். இதன்மூலம் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனைப் படைத்தார். அடுத்த வந்த ராஸ்  டெய்லரை எல்பிடபிள்யூ மூலம் வெளியேற்றி நான்கு பந்தில் நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தி சாதனைப் படைத்தார். இதற்கு முன்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நான்கு பந்தில் நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தி சாதனைப் படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போட்டியில் இலங்கை அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Anbu Communications

Black Forest Cakes


Thoothukudi Business Directory