» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட்: இந்திய அணி நிதான ஆட்டம்

சனி 31, ஆகஸ்ட் 2019 3:16:08 PM (IST)வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 264 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் ஜமைக்காவில் உள்ள கிங்ஸ்டன் சபினா பார்க்கில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஜேசன் ஹோல்டர் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டகாரர்களாக ராகுல், அகர்வால் களமிறங்கினர். ராகுல் 13 ரன்கள் எடுத்த நிலையில் ஹோல்டர் பந்து வீச்சில் ரஹீம் கார்ன்வாலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்த வந்த புஜாரா 6 ரன்னில் ரஹீம் கார்ன்வால் பந்து வீச்சில் வெளியேறினார். 
 
இந்நிலையில் அகர்வால் உடன் ஜோடி சேர்ந்த கேப்டன் கோலி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். அகர்வால் டெஸ்டில் தனது 3-வது அரை சதத்தை பதிவு செய்தார். அவர் 55 ரன்கள் இருந்த நிலையில் ஹோல்டர் பந்து வீச்சில் ரஹீம் கார்ன்வாலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த ரகானே கேப்டன் விராட் கோலி உடன் ஜோடி சேர்ந்தார். நிதானமாக விளையாடிய விராட் கோலி அரை சதத்தை கடந்தார். இதனையடுத்து ரகானே 24 ரன்களிலும் கேப்டன் விராட் கோலி 76 ரன்களிலும் வெளியேறினர்.  

சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் இழந்த நிலையில் விகாரி ரிஷப் பந்த் ஜோடி பொறுப்புடன் ஆடி வருகின்றனர். விகாரி 80 பந்துகளில் 42 ரன்களிலும் ரிஷப் பந்த் 64 பந்துகளில் 27 ரன்களிலும் ஆடி வருகின்றனர். இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 264 ரன்கள் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கேப்டன் ஹோல்டர் 3 விக்கெட்டுகளும், ரோச், ரஹீம் கார்ன்வால் தலா ஒரு விக்கெட்டுகளும் வீழ்த்தினர். அறிமுக போட்டியில் களம் இறங்கிய ரஹீம் கார்ன்வால் ஒரு விக்கெட் மற்றும் 2 கேட்ச் பிடித்து அசத்தி உள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsBlack Forest Cakes
Anbu Communications
Thoothukudi Business Directory