» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற தமிழ்ப் பெண் : தலைவர்கள் வாழ்த்து

வியாழன் 29, ஆகஸ்ட் 2019 12:03:45 PM (IST)ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தமிழ்ப் பெண்ணான இளவேனில் வாலறிவன் தங்கம் வென்றுள்ளார். 

குஜராத்தில் வசிக்கும் 20 வயது தமிழ்ப் பெண்ணான இளவேனில் வாலறிவன், 10 மீ. ஏர் ரைஃபிள் போட்டியில் 251.7 புள்ளிகள் பெற்று அவர் தங்கம் வென்றுள்ளார். கடந்த வருடம், சிட்னியில் நடைபெறும் துப்பாக்கிச் சுடுதல் ஜூனியர் உலகக் கோப்பைப் போட்டியில் இளவேனில் உலக சாதனையுடன் தங்கம் வென்றார். இந்நிலையில் சீனியர் உலகக் கோப்பைப் போட்டியில் அவர் முதல்முறையாகத் தங்கம் வெல்கிறார். இந்தப் போட்டியில் அபூர்வி சண்டேலா, அஞ்சலி பக்வத் ஆகியோருக்குப் பிறகு தங்கம் வெல்லும் 3-வது இந்திய வீராங்கனை, இளவேனில். கடலூரில் பிறந்த இவர், இரு வயதுக்குப் பிறகு அஹமதாபாத்தில் வசித்து வருகிறார்.

தலைவர்கள் வாழ்த்து

உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை இளவேனிக்கு தமிழிசை ராமதாஸ், தினகரன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், பிரேசிலில் நடைபெற்ற உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்று நம் தேசத்திற்கு பெருமை சேர்த்த கடலூரை சேர்ந்த தமிழக வீராங்கனை சகோதரி இளவேனில் வளரிவான் அவர்களுக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்வதாக தமிழக பாஜக தலைவர் டாக்டர்.தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது டிவிட்டரில், ரியோடி ஜெனிரோவில் நடைபெற்ற உலக துப்பாக்கி சுடும் போட்டியின் 10 மீட்டர் ஏர்ரைபிள் பிரிவில் கடலூர் வீராங்கனை இளவேனில் தங்கப்பதக்கம் வென்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அவரால் ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் பெருமை. அவரது சாதனைகளும்,  பதக்கங்களும், அதன்வழியான பெருமைகளும் பெருக வேண்டும்!

இதுகுறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது டிவிட்டரில், உலக அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றிருக்கிற தமிழக வீராங்கனை செல்வி.இளவேனில் அவர்களுக்கு மனப்பூர்வமான பாராட்டுக்கள். பிரேசிலில் நடைபெற்ற 10மீ ஏர் ரைபிள் பிரிவில் இந்த சாதனையைப் புரிந்திருக்கும் இளவேனில், கடந்த ஆண்டு ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கிச் சுடும் போட்டியிலும் தங்கம் வென்றவர். 20 வயதிலேயே இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்திருக்கும் இளவேனில், உலகளவில் இன்னும் பல சாதனைகளைப் புரிந்திட வாழ்த்துகிறேன்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest CakesAnbu Communications


Thoothukudi Business Directory