» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

மாநில அளவிலான கராத்தே போட்டியில் சாதனை: நாசரேத் மாணவர்களுக்கு எம்எல்ஏ பாராட்டு !

செவ்வாய் 13, ஆகஸ்ட் 2019 10:27:43 AM (IST)கராத்தே மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற நாசரேத் ஆலன் திலக் கராத்தே பள்ளி மாணவர்களை எஸ்.பி. சண்முகநாதன் எம்.எல்.ஏ பாராட்டினார்.

நாகர்கோவில் உள்ள பொன் ஜெஸ்லி பொறியியல் கல்லுரி உள் விளையாட்டு அரங்கத்தில் வைத்து மாநில அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. அதில் 300 மாணவர்கள் கலந்து கொண்டனர்.இதில் நாசரேத் ஆலன்திலக் கராத்தே பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்தனர். ஆலன் திலக் கராத்தே பள்ளி மாணவர்கனையும் பயிற்சி அளித்த கராத்தே மாஸ்டர் டென்னிசனையும் முன்னான் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ பாராட்டினார். மேலும் அதிமுக ஆழ்வை ஓன்றிய செயலாளர் ராஐநாராயனண்,அதிமுக நாசரேத் பேரூராட்சி செயலர் கிங்ஸ்லி உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsNalam PasumaiyagamBlack Forest Cakes

CSC Computer Education

Anbu CommunicationsThoothukudi Business Directory