» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

இந்தியா vs மே.இ.தீவுகள் முதல் ஒருநாள் போட்டி மழையால் ரத்து

வெள்ளி 9, ஆகஸ்ட் 2019 3:57:03 PM (IST)



இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையே கயானாவில் நேற்று நடக்க இருந்த முதல் ஒருநாள்போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு இந்திய அணி பயணம் மேற்கொண்டுள்ளது. டி20 தொடரை 3-0 என்று கைப்பற்றிய நிலையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நேற்று தொடங்கியது. முதல் ஆட்டம் கயானாவில் பகல் ஆட்டமாக நேற்று நடந்தது. அதன்பிடி ஆட்டம் தொடங்க இருந்தபோது மழை பெய்ததால், ஆட்டம் தாமதமானது. மழை நின்றபின், 43 ஓவர்கள் கொண்ட போட்டியாக மாற்றப்பட்டது.

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பீல்டிங்கைத் தேர்வு செய்தார். லூயிஸ், கெயில் ஆட்டத்தைத் தொடங்கினர். முகமது ஷமியும், புவனேஷ்வர் குமாரும் ஆடுகளத்தின் ஈரப்பதத்தைப் பயன்படுத்தி பந்தை நன்றாக ஸ்விங் செய்தார்கள். இதனால், கெயில், லூயிஸ் ரன் சேர்க்க சிரமப்பட்டனர். 10 ஓவர்களில் மேற்கிந்தியத்தீவுகள் அணி விக்கெட் இழப்பின்றி 42 ரன்கள் சேர்த்திருந்தது. தொடக்கத்தில் இருந்தே தடுமாறிய கெயில் 31 பந்துகளில் 4 ரன்கள் சேர்த்த நிலையில், குல்தீப் யாதவ் வீசிய 11-வது ஓவரின் முதல் பந்தில் கிளீன் போல்டாகி கெயில் வெளியேறினார். கெயிலின் கிரிக்கெட் வாழ்க்கையில் மிக மோசமான ஸ்ட்ரைக் ரேட் 12.9 என்பது இதுவாகத்தான் இருக்கும்.

அடுத்து ஷாய் ஹோப் களமிறங்கி, லூயிஸுடன் சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆடிவந்தனர். 13 ஓவர்களில் மேற்கிந்தியத் தீவுகள் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் மீண்டும் மழை குறுக்கிட்டது. இதையடுத்து, ஆட்டத்தை 34 ஓவர்களாக குறைக்கலாம் என்று நடுவர்கள் முடிவு செய்தனர். ஆனால், மைதானத்தின் ஈரம், மழை வருவதற்கான அதிகமான சாத்தியங்கள் ஆகியவற்றால் ஆட்டத்தை ரத்து செய்வதாக நடுவர்கள் அறிவித்தனர். 2-வது ஒருநாள் ஆட்டம் போர்ட் ஆப் ஸ்பெயின் வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Black Forest Cakes



Anbu Communications

Nalam Pasumaiyagam

CSC Computer Education



Thoothukudi Business Directory