» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

தீபக் சாஹர், பந்த், கோலி அபாரம்: வெஸ்ட் இன்டீஸ் டி-20 தொடரை முழுமையாக வென்றது இநதியா!!

புதன் 7, ஆகஸ்ட் 2019 10:46:54 AM (IST)மே.இ.தீவுகளுக்கு எதிரான மூன்றாவது டி20 ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி டி20 தொடரை 3-0 என முழுமையாக வென்றுள்ளது. 

இந்திய அணி ஏற்கெனவே முதல் இரு டி20 ஆட்டங்களையும் வென்ற நிலையில் 3-வது டி20 ஆட்டம் கயானா பிராவிடென்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த மே.இ.தீவுகள் 146/6 ரன்களைச் சேர்த்தது. பொல்லார்ட் 58, ரோவ்மேன் 32 ரன்களை விளாசினர். தீபக் சாஹர் சாஹர் 3 ஓவர் 1 மெய்டன் 4 ரன்கள் 3 விக்கெட் என்று அசத்த மே.இ.தீவுகள் தொடக்கத்திலேயே 14/3 என்று தடுமாறியது. 6 சிக்சர்கள் ஒரேயொரு பவுண்டரி அடித்த பொலார்ட் 45 பந்துகளில் 58 ரன்கள் என்று பின்னி எடுத்தார். நிகோலஸ் பூரன் 1 பவுண்டரி 1 சிக்சருடன் 17 ரன்களை 23 பந்துகளில் எடுக்க இருவரும் சேர்ந்து 4வது விக்கெட்டுக்காக 9 ஓவர்களில் 60 ரன்களைச் சேர்த்தனர். 

58 ரன்கள் எடுத்த கிரன் பொலார்ட் , நவ்தீப் சைனியின் சமயோசித ஃபுல் லெந்த் ஸ்லோ பந்தில் பவுல்டு ஆனார். பின்னர் 147 ரன்கள் இலக்கை எதிர்த்து களமிறங்கிய இந்திய அணியில் ராகுல் 18 பந்துகளில் 20ரன்களும், ஷிகர் தவண் 3 ரன்களிலும் வெளியேறினர். 27/2 என்ற நிலையில் கோலி, ரிஷப் பந்த் இணை பொறுப்பாக ஆடியது. முதல் 2 ஆட்டங்களில் சோபிக்காத இளம் வீரர் ரிஷப் பந்த் 4 சிக்ஸர், 4 பவுண்டரியுடன் 42 பந்துகளில் 65 ரன்கள் எடுத்தார். ரிஷப் பந்த் சில திகைப்பூட்டும் ஷாட்களை அவருக்கேயுரிய அனாயாசத்தன்மையுடன் ஆடினார். இருமுறை எக்ஸ்ட்ராகவரில் தூக்கி அடித்த ஷாட், ரிவர்ஸ் ஸ்வீப், பிறகு ஒரு அலட்சியமான பிளிக் சிக்ஸ் என்று அவரது ஷாட்கள் வேறு விதமாக அமைந்தன.  கேப்டன் கோலி  6 பவுண்டரியுடன் 59 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.  

மே.இ.தீவுகள் தரப்பில் ஒஷேன் தாமஸ் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இந்திய அணி டி20 தொடரை 3-0 என முழுமையாக வென்றுள்ளது. தீபக் சாஹர் ஆட்ட நாயகனாகவும் , குருணால் பாண்டியா தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.  3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் வியாழன் முதல் தொடங்குகிறது. 3 ஒருநாள் ஆட்டங்களும் இந்திய நேரம் இரவு 7 மணிக்குத் தொடங்குகின்றன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Black Forest Cakes

Thoothukudi Business Directory