» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

சர்வதேச டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஸ்டெய்ன் ஓய்வு

செவ்வாய் 6, ஆகஸ்ட் 2019 3:35:12 PM (IST)

தென்னாப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் சர்வதேச டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

டேல் ஸ்டெய்ன் தனது ஓய்வு குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்த விளையாட்டில் நான் மிகவும் விரும்பும் ஃபார்மட்டிலிருந்து இன்று நான் விலகுகிறேன். கிரிக்கெட்டில் டெஸ்ட் போட்டிதான் சிறந்த ஃபார்மட் என்பது எனது கருத்து. இது உங்கள் மனம், உடல், உணர்வு அனைத்தையும் சோதிக்கும். நான் தொடர்ந்து டி20, ஒரு நாள் போட்டிகளில் முழு உத்வேகத்துடன் விளையாடுவேன். இந்த நேரத்தில் நான் யாருக்கும் தனிப்பட்ட முறையில் நன்றி சொல்லவில்லை. கிரிக்கெட்டில் உள்ள அனைவருக்கும் நன்றி சொல்கிறேன். ஏனென்றால் ஒவ்வொருவரும் என் பயணத்தில் பங்களித்திருக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

2004ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின்போது அறிமுகமான ஸ்டெய்ன் 15 ஆண்டுக்காலமாக அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கியுள்ளார். 93 போட்டிகளில் கலந்துகொண்டு 439 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். 2008ஆம் ஆண்டு 14 போட்டிகளில் விளையாடி 86 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். அந்த ஆண்டு ஐசிசியின் சிறந்த வீரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

காயம் காரணமாகத் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டுவந்த இவர், அவ்வப்போது அணியில் இடம்பிடிக்காமல் சிரமப்பட்டார். மீண்டும் 2018ஆம் ஆண்டு இறுதியில் அணியில் இடம்பிடித்து விளையாடி வந்தவர் பாகிஸ்தான், இலங்கை அணிகளுக்கு எதிராக கடைசியாக விளையாடியுள்ளார். இந்த ஆண்டு நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியிலும் இவருக்கு காயம் ஏற்பட்டது. அதனால் உலகக் கோப்பைத் தொடரில் பங்கேற்க முடியாமல் போனது. ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் ஆரம்பமாகியுள்ள நிலையில் ஸ்டெய்ன் ஓய்வு பெற்றிருப்பது அந்த அணிக்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Anbu Communications


Black Forest Cakes

Thoothukudi Business Directory