» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 5 நாட்களும் பேட்டிங் : இங்கிலாந்து வீரர் ரோரி பர்ன்ஸ் சாதனை

செவ்வாய் 6, ஆகஸ்ட் 2019 12:28:47 PM (IST)



டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 5 நாட்களும் பேட்டிங் செய்து இங்கிலாந்தின் ரோரி பர்ன்ஸ் சாதனை படைத்துள்ளார்.

இங்கிலாந்து-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டி ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 284 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதையடுத்து ஆட்டத்தை தொடங்கிய இங்கிலாந்து அணி வீரர்கள் சிறப்பாக விளையாடி 374 ரன்களை சேர்த்தனர். 2-வது இன்னிங்கை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 487 ரன்களை சேர்த்தது. இந்த ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியாவின் ஸ்மித் 2 இன்னிங்ஸிலும் சதம் அடித்து அசத்தினார்.  இறுதியில் ஆஸ்திரேலிய அணி 251 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் இங்கிலாந்தின் ரோரி பர்ன்ஸ் இந்த ஆஷஸ் தொடரில் 5 நாட்களும் விளையாடி சாதனை படைத்துள்ளார்

இந்த டெஸ்ட் போட்டியில் முதல் நாளில் 4 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட ரோரி பர்ன்ஸ் இரண்டாவது நாள் முழுவதும் பேட்டிங் செய்தார். 3-வது நாளில் 133 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார். 4-ஆம் நாளில் ஆஸ்திரேலிய அணி விளையாடிய பிறகு ஆட்டத்தை ஆரம்பித்த ரோரி பர்ன்ஸ் 21 பந்துகள் எதிர்கொண்டார். 5-வது நாளில் 11 ரன்கள் எடுத்த போது ஆட்டமிழந்தார். இதன் மூலம் டெஸ்ட் தொடரில் 5 நாட்களும் விளையாடிய வீரர் என்ற சாதனையை படைத்தார் ரோரி பர்ன்ஸ் இதற்கு முன்னதாக பாய்காட், லாம்ப், ப்ளிண்டாஃப், கிம் ஹூஜஸ், ரவி சாஸ்திரி, அட்ரியன் க்ரிஃபித், அல்விரோ பீட்டர்சன், புஜாரா ஆகியோர் இந்த சாதனையை படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Anbu Communications

Nalam Pasumaiyagam

Black Forest Cakes


CSC Computer Education




Thoothukudi Business Directory