» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

பந்துவீசும் முன்பே 2 விக்கெட்டை வீழ்த்திய சைனி: சேட்டன் சவுகான், பிஷன்சிங் பேடி மீது கம்பீர் சாடல்

திங்கள் 5, ஆகஸ்ட் 2019 11:15:31 AM (IST)பந்துவீசும் முன்பே இரு விக்கெட்டை வீழ்த்திய பந்துவீச்சாளரை பார்த்ததுண்டா, சைனி பந்துவீச வரும் முன்பே சேட்டன் சவுகான், பிஷன்சிங் பேடி விக்கெட்டைச் சாய்த்துள்ளார் என்று பாஜக எம்.பி.யும், இந்திய அணியின் முன்னாள் வீரருமான கவுதம் கம்பீர் காட்டமாகத் தெரிவித்துள்ளார். 

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியில் நவ்தீப் சைனி அறிமுகமாகி இருந்தார். முதல் போட்டியிலே அசத்தலாகப் பந்துவீசிய சைனி, 4 ஓவர்கள் வீசி 17 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அதுமட்டுமல்லாமல் டி20 வரலாற்றிலையே கடைசி ஓவரை மெய்டனாக வீசிய 2-வது பந்துவீச்சாளர் எனும் பெருமையை சைனி பெற்றார். ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த சைனியின் திறமையைப் பார்த்த கவுதம் கம்பீர் நீண்டநாட்களாகவே இந்திய அணிக்குள் சேர்க்க  வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார். அதுமட்டுமல்லாமல் டெல்லி ரஞ்சி அணியிலும் நவ்தீப் சைனியை சேர்க்குமாறு வலியுறுத்தினார். 

இந்திய அணியில் 150 கி.மீ. வேகத்தில் பந்துவீசக்கூடிய ஒரே வலதுகை வேகப்பந்துவீச்சாளர் என்பதால், சைனியை டெல்லி ரஞ்சி அணியில் சேர்க்க வேண்டும் என்று கவுதம் கம்பீர் குரல் கொடுத்தார். ஆனால், ரஞ்சி அணி தேர்வுக்குழு உறுப்பினர்களாக இருக்கும் முன்னாள் வீரர்கள் பிஷன்சிங் பேடி, சேட்டன் சவுகான் ஆகியோர் சைனியை டெல்லி ரஞ்சி அணியில் எடுக்கத் தொடர்ந்து மறுத்தனர். சைனியை குறித்து கம்பீர் பேசும்போது, வெளிமாநிலத்தைச் சேர்ந்த ஒரு வீரரை டெல்லி ரஞ்சி அணியில் சேர்ப்பது தவறு என்று அவருக்கு முட்டுக்கட்டை போட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Black Forest Cakes


Anbu Communications
Thoothukudi Business Directory