» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

இன்னும் ஏன் விராட் கோலி கேப்டனாக தொடர வேண்டும்? கவாஸ்கருக்கு சஞ்சய் மஞ்சரேகர் பதில்

புதன் 31, ஜூலை 2019 4:14:02 PM (IST)

கோலி கேப்டனாக தொடர கூடாது என்ற கவாஸ்கரின் கருத்துக்கு, சஞ்சய் மஞ்சரேகர் பதில் அளிக்கும் விதத்தில் டுவிட் செய்துள்ளார்.

உலகக் கோப்பை தொடரை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறது. 3 டி20, 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதற்கான இந்திய அணி முன்னதாக அறிவிக்கப்பட்டது.  உலகக் கோப்பை அரையிறுதியில் தோற்று வெளியேறிய இந்திய அணிக்கு, கோலி கேப்டனாக நீடிக்கக் கூடாது என பலதரப்பில் விமர்சிக்கப்பட்ட நிலையில், அணி தேர்வின் போது அணி தேர்வாளர் எம்.எஸ்.கே பிரசாத், வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணிக்கு கோலி தான் மூன்று வித போட்டிக்கும் கேப்டனாக செயல்படுவார் என அறிவித்தார். 

உலகக் கோப்பை தொடர் வரை தான் விராட் கோலி கேப்டனாக செயல்படுவார் என கூறப்பட்ட நிலையில், இந்தியா உலகக் கோப்பையில் தோல்வி அடைந்து வெளியேறிய பின்னரும் ஏன் கோலி மூன்று வித போட்டிக்கும் கேப்டனாக மீண்டும் தேர்வு செய்யப்பட வேண்டும்?... இந்திய தேர்வுக் குழுவின் போக்கு சரியில்லை என கூறியிருந்தார். 

சஞ்சய் மஞ்சரேகர் பதிலடி:

இதற்கு முன்னாள் இந்திய வீரரும், போட்டி வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்சரேகர், "கவாஸ்கரின் கருத்துக்கு இந்த இடத்தில் மரியாதையுடன் உடன் படவிரும்பவில்லை. இந்திய அணி தேர்வாளர்கள், விராட் கோலி கேப்டனாக தொடர நினைத்தது சரியே. இந்திய அணி உலகக் கோப்பையில் சராசரிக்கும் கீழே எல்லாம் விளையாடவில்லை. இந்திய அணி 9 போட்டிகளில் 7ல் வெற்றி பெற்று இரண்டில் மட்டுமே தோல்வி அடைந்தது. அதுவும் கடைசி போட்டி மிக சிறிய வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அதனால் கோலி மீது எந்த ஒரு தவறும் இல்லை” என குறிப்பிட்டு கவாஸ்கருக்கு பதிலளித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads


Black Forest Cakes

Anbu Communications
Thoothukudi Business Directory