» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

அந்தோனி தாஸ் அதிரடி வீண் : தூத்துக்குடி அணி த்ரில் வெற்றி!

வெள்ளி 26, ஜூலை 2019 4:04:01 PM (IST)டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் கோவை கிங்ஸ் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது தூத்துக்குடி அணி.

தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 8ஆவது ஆட்டத்தில் நேற்று (ஜூலை 25) தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியும் கோவை கிங்ஸ் அனியும் திண்டுக்கல் என்பிஆர் கல்லூரி மைதானத்தில் மோதின. டாஸ் வென்ற கோவை அணியின் கேப்டன் அபினவ் முகுந்த் பந்துவீச்சைத் தேர்வுசெய்தார். மழையால் தாமதமான இப்போட்டி 13 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த தூத்துக்குடி அணி நிர்ணயிக்கப்பட்ட 13 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் குவித்தது. 

அதிகபட்சமாக அணியின் கேப்டன் சுப்ரமணியன் சிவா 21 பந்துகளில் 44 ரன்கள் குவித்தார். துவக்க வீரரான அக்‌ஷய் ஸ்ரீனிவாசன் 31 ரன்கள் எடுத்தார். கோவை அணி தரப்பில் அந்தோனி தாஸ் 3 விக்கெட் வீழ்த்தினார்.பின்னர் களமிறங்கிய கோவை அணியின் துவக்க வீரரும் கேப்டனுமான அபினவ் முகுந்த் தான் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார். பின்னர் வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேற கோவை அணி 62 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது ஜோடி சேர்ந்த அக்கில் ஸ்ரீநாத் - அந்தோனி தாஸ் ஜோடி அதிரடியாக விளையாடி ரன் சேர்த்தது. 

இந்த ஜோடி ஐந்தாவது விக்கெட்டுக்கு 71 ரன்கள் சேர்த்த நிலையில் அந்தோனி தாஸ் ஆட்டமிழந்தார். சிக்ஸர் மழை பொழிந்த அந்தோனி தாஸ் 26 பந்துகளில் 7 சிக்ஸர்களுடன் 63 ரன்கள் எடுத்தார். கடைசி வரை போராடிய கோவை அணியால் 13 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. தூத்துக்குடி அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கோவை அணி தோல்வியடைந்திருந்தாலும் 3 விக்கெட் வீழ்த்தியோடு, 63 ரன்கள் குவித்து கடைசி வரை போராடிய அந்தோனி தாஸுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இன்றைய ஆட்டத்தில் சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணியும் காரைக்குடி காளை அணியும் மோதுகின்றன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Black Forest Cakes

Anbu Communications

Thoothukudi Business Directory