» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பான்ஸர்ஷிப்பில் இருந்து ஓப்போ நிறுவனம் விலகல்!!

வியாழன் 25, ஜூலை 2019 5:40:03 PM (IST)இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பான்ஸர்ஷிப்பில் ஓப்போ நிறுவனம் வெளியேறியுள்ளதால், வீரர்களின் ஜெர்ஸியில் விரைவில் புதிய மாற்றம் வரவுள்ளது. 

கடந்த மார்ச் 2017ம் ஆண்டு, விவோ மொபைலை முறியடித்து இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சிக்கான ஸ்பான்ஸர் உரிமைகளை ஓப்போ பெற்றது. அப்போது, மற்றவர்களை விட சுமார் 400 கோடி ரூபாய் அளவுக்கு அதிக தொகை கொடுத்து, ரூ.1079 கோடிக்கு ஒப்பந்தம் கோரியதால் தான் ஓப்போ வென்றது. 2017 முதல் 2022 வரையிலான காலகட்டத்துக்கு இந்த ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது. ஒப்பந்தத்தின் படி, இரண்டு நாடுகள் மோதும் தொடரின் ஒவ்வொரு போட்டிக்கும் ரூ.4.61 கோடி மற்றும் ஐசிசி நடத்தும் தொடர்களில் பங்கேற்கும் ஒவ்வொரு போட்டிக்கும் ரூ.1.56 கோடியை ஓப்போ நிறுவனம் செலுத்தி வருகிறது. 

ஆனால், இந்த பெரிய தொகையால் தங்களுக்கு நஷ்டம் ஏற்படுவதாக ஓப்போ நிறுவனம் கருதுகிறது. இதனால், ஒப்பந்தத்தை கைமாற்றிவிட பேச்சுவார்த்தை நடத்திய ஓப்போ நிறுவனம், பெங்களூருவைச் சேர்ந்த கல்வி தொழில்நுட்ப ஆன்லைன் டுட்டோரியல் நிறுவனமான பைஜுஸ்-க்கு ஒப்பந்தத்தை மாற்றிக் கொடுக்க முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான ஒப்பந்தம், ஓப்போ, பைஜுஸ், பிசிசிஐ ஆகியோரிடையே இன்று கையெழுத்தாகவுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து பேசிய பிசிசிஐ அதிகாரி ஒருவர், ஓப்போவும் பைஜுவும் தங்களுக்கிடையே பேச்சுவார்த்தை நடத்தி இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஜெர்ஸி ஸ்பான்சர் ஒப்பந்த கைமாற்றை ஏற்படுத்திக்கொண்டனர்.

இதுகுறித்து உச்சநீதிமன்றம் நியமித்த நிர்வாகக் கமிட்டிக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ஸ்பான்ஸர் நிறுவனங்கள் தங்களுக்கிடையே பேச்சுவார்ததை நடத்தி பரஸ்பர உடன்படிக்கை மேற்கொண்டதால் பிசிசிஐக்கு எந்தவித நஷ்டமும் இல்லை. ஓப்போ என்ன ஒப்பந்தத் தொகையை அளித்ததோ அதனை பைஜுவும் அளிக்க வேண்டும். ஸ்பான்சர்ஷிப் பரிமாற்ற ஒப்பந்தம் பிசிசிஐ விதிகளில் உள்ளது, இது ரகசிய உடன்படிக்கை என்பதால் இதன் நிதி விவகாரங்கள் வெளிப்படுத்தப்படமாட்டாது என்று கூறியுள்ளார். எனினும், இந்த ஒப்பந்த மாற்றத்தால் பிசிசிஐக்கு ஒப்பந்த தொகையை விட பைஜூஸ் நிறுவனமானது கூடுதலாக 10 சதவீதம் கொடுக்க வேண்டும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu CommunicationsBlack Forest CakesThoothukudi Business Directory