» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

சில நாடுகளில் கொடியில்தான் நிலா இருக்கிறது: சந்திரயான் - 2 குறித்து ஹர்பஜன் பெருமிதம்

செவ்வாய் 23, ஜூலை 2019 3:51:20 PM (IST)

சில நாடுகளின் கொடியில்தான் நிலா இருக்கிறது. ஆனால் சில நாடுகளில் கொடிகள் நிலாவில் உள்ளன” என்று  ஹர்பஜன் கருத்து பதிவிட்டுள்ளார்.

சந்திரயான்-2 விண்கலம் மார்க்-3 ராக்கெட் மூலம் நேற்று பிற்கபல் 2:43 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த விண்கலம், செப்டம்பர் 8-ம் தேதி நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை ‘இது பெருமிதமான தருணம்’ என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோரும் விஞ்ஞானிகளும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

இதில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், இந்தியாவுக்குப் பாராட்டு தெரிவித்துள்ளதுடன் சில நாடுகளைக் கிண்டல் செய்து தனது வாழ்த்தைப் பதிவிட்டுள்ளார். அதில், "சில நாடுகளின் கொடியில்தான் நிலா இருக்கிறது. ஆனால் சில நாடுகளில் கொடிகள் நிலாவில் உள்ளன” என்று ஹர்பஜன் பாகிஸ்தான் உட்பட பல அரபு நாடுகளின் கொடிகளைப் பதிவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Nalam Pasumaiyagam

Black Forest Cakes

CSC Computer Education







Thoothukudi Business Directory