» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

வெஸ்ட் இண்டீஸ் தொடர்: கோலி தலைமயிலான இந்திய அணி அறிவிப்பு

ஞாயிறு 21, ஜூலை 2019 4:52:36 PM (IST)வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.

இந்திய அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 3 டி 20, 2 டெஸ்ட் போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்ய பிசிசிஐ குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேர்வு குழு தலைவர் எம் எஸ் கே பிரசாத் மற்றும் கேப்டன் விராட் கோலி உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்துக்கு பின்னர் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டது.

டி 20 போட்டிக்கான வீரர்கள் 

விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா (துணை கேப்டன்), ஷிகர் தவான், கே.எல்.ராகுல், ஷ்ரேயஸ் அய்யர், மனீஷ் பாண்டே, ரிஷப் பண்ட், குருணால் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ராகுல் சஹார், புவனேஷ்வர் குமார், கலீல் அகமது, தீபக் சஹார், நவ்தீப் சைனி

ஒருநாள் போட்டிக்கான வீரர்கள் :

விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா (துணை கேப்டன்), ஷிகர் தவான், கே.எல்.ராகுல், ஷ்ரேயஸ் அய்யர், மனீஷ் பாண்டே, ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல், கேதார் ஜாதவ், மொகமது ஷமி, புவனேஷ்வர் குமார், கலீல் அகமது, நவ்தீப் சனி.

டெஸ்ட் போட்டிக்கான வீரர்கள்:

விராட் கோலி (கேப்டன்), ரஹானே (துணை கேப்டன்),மயங்க் அகர்வால், கே.எல்.ராகுல், புஜாரா, ஹனுமா விஹாரி, ரோகித் சர்மா, ரிஷப் பண்ட், விரித்திமான் சஹா, ரவிசந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், இஷாந்த் சர்மா, மொகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, உமேஷ் யாதவ்.
Related Tags :


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications


Black Forest Cakes
Thoothukudi Business Directory