» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

மே.இ.தீவுகளுக்கு எதிரான தொடரில் தோனி விலகல்!

சனி 20, ஜூலை 2019 3:43:31 PM (IST)

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் இருந்து விலகுவதாக முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அறிவித்துள்ளார்.

ஆகஸ்ட் மாதம் இந்திய, மே.இ. தீவுகள் இடையே அமெரிக்கா மற்றும் மே.இ. தீவுகளில் தலா 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்கள் நடக்கின்றன. மேலும் உலக டெஸ்ட் சாம்பியன் போட்டியின் ஒரு பகுதியாக 2 டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடர் ஆக. 22-இல் தொடங்குகிறது. இதற்கான இந்திய அணி ஞாயிற்றுக்கிழமை தேர்வு செய்யப்பட உள்ளது. இந்நிலையில், ராணுவ நடவடிக்கைகளில் அடுத்த 2 மாதங்களுக்கு ஈடுபட விரும்புவதால் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் இருந்து விலகுவதாக மகேந்திர சிங் தோனி இன்று அறிவித்துள்ளார். 

இதுதொடர்பாக பிசிசிஐ தரப்பில் கூறுகையில், இங்கு 3 விஷயங்களை தெளிவுபடுத்த விரும்புகிறோம். முதலாவது தோனி ஓய்வுபெறவில்லை, ராணுவ நடவடிக்கைகள் தொடர்பாக 2 மாதகாலம் விடுப்பு எடுத்துள்ளார் மற்றும் தோனி தொடர்பாக அடுத்தகட்ட முடிவு எடுக்கும் அதிகாரம் கேப்டன் விராட் கோலி மற்றும் தேர்வுக்குழுத் தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. எனவே, ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அணிகளுக்கு ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Black Forest Cakes

Anbu Communications


Thoothukudi Business Directory