» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

சச்சின் டெண்டுல்கருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது: ஐசிசி கௌரவிப்பு

வெள்ளி 19, ஜூலை 2019 11:47:13 AM (IST)



கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி ஐசிசி கௌரவித்துள்ளது. 

லண்டனில் வியாழக்கிழமை நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் கௌன்சில் (ஐசிசி) பொதுக்குழுக் கூட்டத்துக்குப் பின் அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் பிஷன் சிங் பேடி, சுனில் கவாஸ்கர், கபில் தேவ், அனில் கும்ப்ளே, ராகுல் டிராவிட் ஆகியோருக்கு அடுத்து ஐசிசி வாழ்நாள் சாதனையாளர் விருது பெறும் 6-ஆவது இந்தியரானார்.இதுகுறித்து சச்சின் டெண்டுல்கர் கூறுகையில், பல தலைமுறைகளாக கிரிக்கெட் விளையாட்டில் சாதித்தவர்களுக்கு ஐசிசி வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவித்து வருகிறது. அவர்கள் அனைவரும் கிரிக்கெட் விளையாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர்கள். மேலும் இந்த விளையாட்டை பிரபலமடையச் செய்தவர்கள். 

இதில் எனது பங்களிப்பும் இருப்பது மகிழ்ச்சிக்குரியதாக உள்ளது. இந்தப் பட்டியலில் இடம்பெறுவதன் மூலம் நான் கௌரவிக்கப்பட்டுள்ளேன்.  எனது இந்த நீண்ட சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் உறுதுணையாக இருந்த அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். குறிப்பாக எனது பெற்றோர்கள், சகோதரர் அஜித், மனைவி அஞ்சலி ஆகியோர் எனக்கு பக்கபலமாக இருந்துள்ளனர். அதிலும் ரமாகாந்த் ஆச்ரேக்கர் போன்ற ஒரு குருவைப் பெற்ற நான் அதிர்ஷ்டசாலி தான். கிரிக்கெட்டை நான் ரசித்து விளையாட உறுதுணையாக இருந்த மும்பை கிரிக்கெட், பிசிசிஐ, சக வீரர்கள் மற்றும் என்னை வழிநடத்திய கேப்டன்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. எனது கிரிக்கெட்டைப் பாரட்டிய ஐசிசி-க்கும் நன்றி. டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என 3 வகை கிரிக்கெட்டும் மேலும் வளரும் என்று தெரிவித்தார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes



Nalam Pasumaiyagam

Anbu Communications


CSC Computer Education




Thoothukudi Business Directory