» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

இந்திய அணியிலிருந்து தோனியை நீக்க பிசிசிஐ முடிவு?

செவ்வாய் 16, ஜூலை 2019 4:08:01 PM (IST)

தோனியின் ஓய்வு குறித்து பலரும் கருத்து தெரிவித்துவரும் நிலையில் அவரை அணியிலிருந்து நீக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

உலகக் கோப்பை தொடர் நடைபெற்றுவந்தபோதே தோனி ஓய்வு பெறுவதாகச் செய்திகள் வெளியாகின. ஆனால், அப்படியோர் அறிவிப்பை தோனி வெளியிடவில்லை. இந்த நிலையில், உலகக் கோப்பைத் தொடரில் பெரியளவில் தோனியின் பங்களிப்பு இல்லை என்பதால் அவரை நீக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

"தோனியின் கிரிக்கெட் வாழ்க்கை இன்னமும் முடிவு பெறாதது ஆச்சரியம் அளிக்கிறது. ரிஷப் பந்த் போன்ற வீரர்கள் வாய்ப்புகளைப் பற்றிக்கொள்ளக் காத்திருக்கிறார்கள். உலகக் கோப்பையிலேயே பார்த்தோம், முன்பு போல தோனியால் விரைவாக ரன்கள் குவிக்க முடியவில்லை. 6ஆம் நிலை, 7ஆம் நிலை வீரராகக் களமிறங்கியும் அவரால் அதிரடியாக விளையாட முடியவில்லை. இது அணியின் வெற்றி வாய்ப்பைப் பாதிக்கிறது” என்று பெயர் குறிப்பிடாத பிசிசிஐ நிர்வாகி ஒருவர் டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு இந்திய அணி அடுத்ததாகச் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அந்த அணியிலும் தோனி இடம்பெற வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது."அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பையில் அவரைச் சேர்க்கும் திட்டம் இந்திய அணிக்கு இல்லை என்றுதான் எண்ணுகிறேன். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து கெளரவமாக அவர் விடைபெற வேண்டும். இனிமேல் இந்திய அணிக்கு அவர் தேர்வு செய்யப்பட வாய்ப்பில்லை. அவர் இனிமேல் சாதிக்க எதுவுமில்லை. சர்வதேச கிரிக்கெட்டில் நிரூபிக்க எதுவுமில்லை. இனிமேலும் அவர் இந்திய அணிக்குத் தேர்வாவார் என எண்ணவில்லை. அதனால் ஓய்வு பெறுவது குறித்து அவர் அறிவிக்க வேண்டும்” என்று அந்த நிர்வாகி தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes

Anbu Communications
Thoothukudi Business Directory