» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

முதல்முறையாக உலகக்கோப்பையை வென்று இங்கிலாந்து அணி சாதனை

திங்கள் 15, ஜூலை 2019 8:59:47 AM (IST)கிரிக்கெட் உலக கோப்பையில் பரபரப்பான இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இங்கிலாந்து அணி முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.  சூப்பர் ஓவரும் டை ஆனதால், அதிக பவுண்டரிகள் அடிப்படையில் இங்கிலாந்து அணி உலகக் கோப்பையை வென்றது. 

உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆட்டத்தில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணி மோதியது. இந்த இறுப்போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணிகேன் வில்லியம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். மார்டின் கப்தில், நிகோல்ஸ் இருவரும் இன்னிங்சை தொடங்கினர். கப்தில் 19 ரன் எடுத்து வோக்ஸ் பந்துவீச்சில் எல்பிடபுள்யு ஆனார். இதையடுத்து  நிகோல்சுடன் வில்லியம்சன் இணைந்தார். நிகோல்ஸ் - வில்லியம்சன் ஜோடி 2வது விக்கெட்டுக்கு 74 ரன் சேர்த்தது. ல்லியம்சன் 30 ரன் எடுத்து பிளங்கெட் பந்துவீச்சில் பட்லர் வசம் பிடிபட்டார். நிதானமாக விளையாடி அரை சதம் அடித்த நிகோல்ஸ் 55 ரன் எடுத்து (77 பந்து, 4 பவுண்டரி) பிளங்கெட் பந்துவீச்சில் கிளீன் போல்டானார். 

டெய்லர் 15 ரன்னில் பெவிலியன் திரும்ப, நீஷம் 19 ரன், கிராண்ட்ஹோம் 16 ரன் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். பொறுப்புடன் விளையாடிய டாம் லாதம் 47 ரன் (56 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி வோக்ஸ் வேகத்தில் ஜேம்ஸ் வின்ஸ் வசம் பிடிபட்டார். மேட் ஹென்றி 4 ரன் எடுத்து ஆர்ச்சர் வேகத்தில் கிளீன் போல்டாக, நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 241 ரன் குவித்தது. சான்ட்னர் 5, போல்ட் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இங்கிலாந்து பந்துவீச்சில் வோக்ஸ், பிளங்கெட் தலா 3 விக்கெட், ஆர்ச்சர், மார்க் வுட் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். உலகக் கோப்பை இறுதி ஆட்டம் டை ஆனதால், சூப்பர் ஓவர் நடைமுறை கடைபிடிக்கப்பட்டது. 

இதையடுத்து வெற்றியை தீர்மானிக்க சூப்பர் ஓவர் கடைப்பிடிக்கப்பட்டது. சூப்பர் ஓவரில் முதலில் இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. மேலும் இங்கிலாந்து அணி வீரர் பட்ளர் மற்றும் ஸ்டோக்ஸ் பேட்டிங் செய்தனர். இருவரும் இணைந்து 15 ரன்கள் எடுத்தனர். மேலும் சூப்பர் ஒவரில் 16 ரன்களை வெற்றி இழக்காக இங்கிலாந்து அணி நிர்ணயத்தது. இதையடுத்து நியூசிலாந்து அணி வீரர் கப்டில் மற்றும் நீஸ்சாம் களமிறங்கி 7 பந்துகளில் 15 ரன்களே எடுக்க முடிந்தது. சூப்பர் ஓவரும் டை ஆனதால், அதிக பவுண்டரிகள் அடிப்படையில் இங்கிலாந்து அணி உலகக் கோப்பையை வென்றது.  இங்கிலாந்து அணி முதல்முறையாக உலகப்கோப்பை வென்றது சாதனை படைத்தது. இறுதி ஆட்டத்திலும் போராடி, சூப்பர் ஓவரிலும் போராடியபோதும் வெறும் பவுண்டரிகள் எண்ணிக்கையின் அடிப்படையில் துரதிருஷ்டவசமாக உலகக் கோப்பையை இழந்தது நியூஸிலாந்து


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Black Forest Cakes

Nalam Pasumaiyagam

CSC Computer Education


Anbu CommunicationsThoothukudi Business Directory