» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக ராகுல் டிராவிட் நியமனம்

செவ்வாய் 9, ஜூலை 2019 12:32:16 PM (IST)

தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட்டை நியமித்து பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்ட அறிவிப்பில்," தேசிய கிரிக்கெட் அகாடமியின் அனைத்துவிதமான கிரிக்கெட் தொடர்பான நடவடிக்கைகளையும் இனி ராகுல் டிராவிட் மேற்பார்வையிடுவார். வழிகாட்டல், பயிற்சி, பயிற்சியாளர், வீரர்களை ஊக்குவித்தல் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளையும் கவனிப்பார். மேலும், தேசிய ஆடவர், மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர்களுடன் இணைந்து ராகுல் டிராவிட் அணிகளின் முன்னேற்றத்துக்காகப் பணியாற்றுவார். குறிப்பாக இந்தியா ஏ, 19 வயதுக்குட்பட்டோர் அணி, 23 வயதுக்குட்பட்டோருக்கான அணி ஆகியவற்றில் பயிற்சி அளித்தல், வளர்ச்சித் திட்டங்களையும் டிராவிட் கவனிப்பார்" எனத் தெரிவித்துள்ளது.

 இந்திய கிரிக்கெட் அணியின் சுவர் என்று வர்ணிக்கப்படும் ராகுல் டிராவிட் 164 டெஸ்ட் போட்டிகளில் 36 சதம், 56 அரை சதங்கள் உள்பட 13 ஆயிரத்து 288 ரன்கள் குவித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 52 ரன்கள் சராசரி வைத்துள்ளார். 344 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய டிராவிட் 12 சதங்கள், 83 அரை சதங்கள் உள்பட 10 ஆயிரத்து 889 ரன்கள் சேர்த்து சராசரியாக 39 ரன்கள் வைத்துள்ளார். ராகுல் டிராவிட் எத்தனை ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளார் எனும் விவரத்தை பிசிசிஐ வெளியிடவில்லை. இந்திய அணியில் இளம் வீரர்களை உருவாக்குவதில் ராகுல் டிராவிட் முக்கிய பங்கு வகித்து வருகிறார். இளம் அணியின் பயிற்சியாளராகவும் அவர் இருந்துள்ளார்.

தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக ராகுல் டிராவிட் கடந்த 1-ம் தேதியே ஏற்று செயல்பட்டிருக்க வேண்டும். ஆனால், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் இருந்த பணியால் டிராவிட் பதவியேற்பது தாமதமானது. பிசிசிஐ அமைப்பை நிர்வகிக்க உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட நிர்வாகிகள் குழு, இந்தியா சிமெண்ட்ஸ் பணிக்காலத்தை முடித்துவிட்டு வாருங்கள் அல்லது பதவியில் இருந்து விலகிவிட்டுவாருங்கள் என்று டிராவிட்டிடம் தெரிவித்திருந்தது. ஏனென்றால், ஆதாயம் தரும் இரட்டைப் பதவியில் ஒருவர் இருப்பது சர்ச்சையானது. இதையடுத்து, இந்தியா சிமெண்ட்ஸ் டிராவிட்டை பணியில் இருந்து  விடுவித்தது. இதையடுத்து தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Anbu Communications

Nalam Pasumaiyagam

Black Forest Cakes


CSC Computer Education



Thoothukudi Business Directory