» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி அளித்த தென் ஆப்பிரிக்கா : முதலிடம் பிடித்தது இந்தியா

ஞாயிறு 7, ஜூலை 2019 11:47:05 AM (IST)உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆட்டத்தில் 10 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது. 

மான்செஸ்டரில் சனிக்கிழமை நடைபெற்ற தங்கள் கடைசி ரவுண்ட் ராபின் ஆட்டத்தில் மோதின. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிகை தேர்வு செய்தது. தொடக்க வீரர்கள் மார்க்ரம்-டி காக் இணை அதிரடியாக ஆடி ரன்களை குவித்தனர். மார்க்ரம் 34 ரன்களுடன் அவுட்டானார். டிகாக் 52 ரன்களுடன் தனது 24-ஆவது ஒருநாள் அரைசதத்தை பதிவு செய்து வெளியேறினார். டூபிளெஸ்ஸிஸ்-ரேஸி வேன்டெர் அபாரம்: அதன் பின் கேப்டன் டூபிளெஸ்ஸிஸ்-ரேஸி வேன்டெர் இணை ஆஸி. பந்துவீச்சை நாலாபுறமும் விரட்டி அடித்தது. 

இருவரும் இணைந்து 3-ஆவது விக்கெட்டுக்கு 100 ரன்களை சேர்த்தனர். ரேஸி வான்டெர் தனது 3-ஆவது ஒருநாள் அரைசதத்தை பதிவு செய்தார். டூபிளெஸ்ஸிஸ் 12-ஆவது சதம்: மறுமுனையில் அபாரமாக ஆடிய கேப்டன் டுபெளெஸிஸ் தனது 12-ஆவது ஒருநாள் சதத்தை பதிவு செய்தார். 2 சிக்ஸர், 7 பவுண்டரியுடன் 94 பந்துகளில் 100 ரன்களை விளாசி பெஹ்ரண்டர்ப் பந்தில் வெளியேறினார் அவர். டூமினி 14 ரன்களுடன் ஸ்டார்க் பந்தில் அவுட்டானார். அப்போது 4 விக்கெட் இழப்புக்கு 295 ரன்களை எடுத்திருந்தது தென் ஆப்பிரிக்கா. தலா 4 சிக்ஸர், பவுண்டரியுடன் 97 பந்துகளில் 95 ரன்களை விளாசிய ரேஸி வேன்டெரை அவுட்டாக்கினார் பேட் கம்மின்ஸ். 

பிரிட்டோரியûஸ 2 ரன்களுக்கு போல்டாக்கினார் ஸ்டார்க். பெலுக்வயோ 4 ரன்களுடன் களத்தில் இருந்தார். இறுதியில் 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 325 ரன்களை குவித்தது தென் ஆப்பிரிக்கா. ஆஸி. தரப்பில் மிச்செல் ஸ்டார்க் 2-59, நாதன் லயான் 2-53 விக்கெட்டுகளை சாய்த்தனர்.  ஆஸ்திரேலியா 126/4:  326 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 25 ஓவர்கள் முடிவில் 126/4 ரன்களை எடுத்திருந்தது.  கேப்டன் பின்ச் 3, ஸ்டீவ் ஸ்மித் 7, ஸ்டாய்னிஸ் 22, மேக்ஸ்வெல் 12 ரன்களுடன் வெளியேறினர். உஸ்மான் காஜா 6 ரன்கள் எடுத்த நிலையில் காயமடைந்து வெளியேறினார். பொறுப்புடன் விளையாடிய வார்னர் 122 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

அவரைத் தொடர்ந்து அலெக்ஸ் கரே 85 ரன்களில் பெவிலியன் திரும்ப ஆஸ்திரேலியா சரிவை சந்தித்தது. பின்னர் வந்த வீரர்களில் கவாஜா (18), ஸ்டார்க் (16), லியான் (3) என அடுத்தடுத்து வெளியேற ஆஸ்திரேலிய அணி 49.5 ஓவரில் 315 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது. தென் ஆப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக ரபாடா 3 விக்கெட் வீழ்த்தினார். இந்த தோல்வியால் ஆஸ்திரேலிய அணி 14 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இலங்கைக்கு எதிரான வெற்றியின் மூலம் இந்திய அணி முதல் இடம் பிடித்தது. அரையிறுதியில் இந்தியா - நியூசிலாந்து அணிகளும், ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளும் மோத உள்ளன. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

Anbu Communications

Thoothukudi Business Directory